பதிவு செய்த நாள்
20 நவ2017
03:53
செம்பு விலை, கடந்த வாரம் சரிந்து வியாபாரமாகியது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமான தாக்கம், நம் சந்தையிலும் எதிரொலித்தது. ஜூன் முதல் விலையேற்றம் கண்ட செம்பு, இந்த மாதம், வியாபாரிகள் மேற்கொண்ட லாபம் ஈட்டுதல் காரணமாக குறைந்தது.உலகின், மொத்த செம்பு நுகர்வில், சரி பாதியை சீனா உபயோகிக்கிறது. இந்நிலையில், சீன பொருளாதாரத்தின் தொய்வு மற்றும் வீட்டுமனை விற்பனை, கட்டுமான பொருட்கள் மீதான தேவை குறைவு போன்றவையும், செம்பு விலையை பாதித்தன.சீன இறக்குமதி, சுத்திகரிக்கப்பட்ட செம்பு அக்டோபரில் குறைந்தது, தொழிற்சாலை நுகர்வு தேவை குறைவு போன்றவை காரணமாக, விலை சரிகிறது. இருப்பினும், இச்சரிவு தற்காலிகமானது என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|