மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவுமாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ... லோட்டே – பியூஜியாட் குழுமங்கள் இந்தியாவில் ரூ.40,000 கோடி முதலீடு லோட்டே – பியூஜியாட் குழுமங்கள் இந்தியாவில் ரூ.40,000 கோடி முதலீடு ...
நுகர்பொருட்கள் விலை குறைப்பு: நிறுவனங்கள் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2017
23:58

புதுடில்லி : ஜி.எஸ்.டி., குறைக்­கப்­பட்­ட­தால், டாபர், ஹிந்­துஸ்­தான் யூனி­லீ­வர், மாரிக்கோ உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், நுகர்­பொ­ருட்­கள் விலையை குறைத்­துள்ளன.


சமீ­பத்­தில், ஜி.எஸ்.டி., கவுன்­சில், 210 பொருட்­களின், ஜி.எஸ்.டி.,யை குறைத்­தது. அவற்­றில், 178 பொருட்­களின் வரி, 28லிருந்து, 18 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. இதன் பய­னால், நுகர்­பொ­ருட்­கள் விலை குறைந்­துள்­ளது.


இது குறித்து, ஹிந்­துஸ்­தான் யூனி­லீ­வர் நிறு­வ­னத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறு­கை­யில், ‘50 கிராம் எடை­யுள்ள, புரூ கோல்டு காபி­யின் விலை, 145 ரூபா­யில் இருந்து, 111 ரூபா­யாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. அடுத்­த­டுத்து, மேலும் சில பொருட்­களின் விலை குறைக்­கப்­படும்’ என்­றார்.


மாரிக்கோ நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, விவேக் கார்வே கூறு­கை­யில், ‘‘ஹேர் ஜெல்ஸ், ஹேர் க்ரீம்ஸ், தேக பரா­ம­ரிப்பு உள்­ளிட்ட பிரி­வு­களில், பொருட்­களின் விலை குறைக்­கப்­பட்டு உள்­ளது. ‘‘கையி­ருப்­பில் உள்ள பொருட்­கள், குறைக்­கப்­பட்ட புதிய விலை, ‘ஸ்டிக்­கர்’ உடன், விற்­பனை செய்­யப்­ப­டு­கின்றன,’’ என்­றார்.


டாபர் இந்­தியா நிறு­வ­னம், ஷாம்பூ, சரும பாது­காப்பு, வீட்டு பரா­ம­ரிப்பு உள்­ளிட்ட பிரி­வு­களில், பொருட்­களின் விலையை, 9 சத­வீ­தம் குறைத்து உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.


பதஞ்­சலி நிறு­வ­னத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறு­கை­யில், ‘ஜி.எஸ்.டி., குறைப்பு நட­வ­டிக்­கையை, நிறு­வ­னம் வர­வேற்­கிறது. இதன் பயன்­கள், வாடிக்­கை­யா­ளரை சென்­ற­டைய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்’ என்­றார்.


ஐ.டி.சி., நிறு­வ­ன­மும், பல்­வேறு பொருட்­களின் விலையை குறைக்­கும் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து, மேலும் பல நுகர்­பொ­ருள் நிறு­வ­னங்­கள், விலை குறைப்பு அறி­விப்பை வெளி­யி­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)