ரூ.10,000 கோடி சேவை வரி விவகாரம்; சுமுக தீர்வு காண அரசு நடவடிக்கைரூ.10,000 கோடி சேவை வரி விவகாரம்; சுமுக தீர்வு காண அரசு நடவடிக்கை ... இந்தியாவில் களமிறங்க தயங்கும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் களமிறங்க தயங்கும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் ...
கொள்ளை லாப வியாபாரம்: பொதுமக்கள் புகார் கூறலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2017
23:53

புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி குறைக்­கப்­பட்ட பின்­ன­ரும், பழைய வரி வசூ­லித்து, கொள்ளை லாபம் பார்க்­கும் வியா­பா­ரி­கள், வணிக நிறு­வ­னங்­கள் மீது, பொது­மக்­கள் புகார் தெரி­விக்க வசதி செய்­யப்­பட்டு உள்­ளது.

இது குறித்து, மத்­திய மறை­முக வரி­கள் மற்­றும் சுங்க வரி வாரி­யம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஜி.எஸ்.டி., கவுன்­சில், பெரு­வா­ரி­யான பொருட்­க­ளுக்­கான, 28 சத­வீத வரியை, 18 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளது. பல பொருட்­களின் வரி, 5 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. தற்­போது, 50 பொருட்­கள் மட்­டுமே, அதி­க­பட்­ச­மான, 28 சத­வீத வரி வரம்­பில் உள்ளன. சேவை துறை­யில், ‘ஏசி’ மற்­றும் சாதா­ரண ஓட்­டல்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த, 18 மற்­றும் 12 சத­வீத வரி, தற்­போது ஒரே சீராக, 5 சத­வீ­தம் என, குறைத்து நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இந்த வரி குறைப்­பால், சிறிய வியா­பா­ரி­கள் மற்­றும் நுகர்­வோர் பெரும் பயன் அடை­வர்.

பொருட்­கள் வாங்­கும் போது, குறைக்­கப்­பட்ட வரி விகி­தப்­படி, பணம் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றதா என்­பதை, நுகர்­வோர் கவ­னிக்க வேண்­டும். www.cbec.gov.in வலை­த­ளத்­தில், பொருட்­க­ளுக்­கான புதிய வரி விகி­தத்தை, நுகர்­வோர் அறிந்து கொள்­ள­லாம். ஜி.எஸ்.டி., கொள்ளை லாப தடுப்பு சட்­டப்­படி, குறைக்­கப்­பட்ட வரி­யின் பயனை, வணிக நிறு­வ­னங்­களும், வியா­பா­ரி­களும், நுகர்­வோ­ருக்கு வழங்க வேண்­டும். அதன்­படி, பொருட்­களின் விலையை குறைக்க வேண்­டும். சரக்கு மற்­றும் சேவை­களில், நியா­ய­மற்ற வகை­யில் பெற்ற கூடு­தல் ஆதா­யத்தை, வட்­டி­யு­டன் நுகர்­வோ­ருக்கு வழங்க, சட்­டம் வகை செய்­கிறது.

தவறு செய்­வோ­ரின் வர்த்­தக உரி­மத்தை ரத்து செய்­வது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்க முடி­யும். இதன்­படி, கொள்ளை லாப­மீட்­டும் நோக்­கு­டன்நடந்து கொள்­ளும் வியா­பா­ரி­கள், வணிக நிறு­வ­னங்­கள் மீது, அதற்­கென அமைக்­கப்­பட்ட குழுக்­க­ளி­டம், நுகர்­வோர் புகார் தெரி­விக்­க­லாம். இந்த விப­ரங்­களை, www.cbec.gov.inல் காண­லாம். ஜி.எஸ்.டி., தொடர்­பாக, வியா­பா­ரி­கள், வணிக நிறு­வ­னங்­க­ளுக்கு உள்ள சந்­தே­கங்­க­ளுக்கு விளக்­கம் அளிக்­க­வும், அவர்­க­ளுக்கு உத­வ­வும், ஜி.எஸ்.டி., சேவா கேந்­தி­ரங்­கள் செயல்­ப­டு­கின்றன.

சென்னை, நுங்­கம்­பாக்­கத்­தில், வரித்­துறை தலைமை கமி­ஷ­னர் அலு­வ­ல­கத்­தி­லும், தேனாம்­பேட்டை, அம்­பத்­துார், அண்ணா நகர் ஆகிய நான்கு இடங்­களில் உள்ள, துணை கமி­ஷ­னர் அலு­வ­ல­கங்­க­ளி­லும், இப்­பி­ரி­வு­கள் செயல்­ப­டு­கின்றன. அங்கு, ஜி.எஸ்.டி., தொடர்­பான அனைத்து உத­வி­க­ளை­யும் பெற­லாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)