இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும்இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் ... ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கலாம் ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கலாம் ...
அடுத்து வரும் மாதங்களில்... சிமென்ட் தேவை சூடுபிடிக்கும் நிறுவனங்களின் லாபம் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2017
00:04

புதுடில்லி:ஜி.எஸ்.டி., ரியல் எஸ்­டேட் சட்­டம் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், சுணக்­கம் கண்­டி­ருந்த கட்­டு­மான பணி­கள், வரும் மாதங்­களில் சூடு­பி­டிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இத­னால், சிமென்ட்­டுக்­கான தேவை அதி­க­ரிக்­கும் என்ற போதி­லும், உற்­பத்­திச் செலவு உயர்வு கார­ண­மாக, தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் லாப வரம்பு குறை­யும் என, தெரி­கிறது.

நடப்பு, 2017 – -18ம் நிதி­யாண்­டில், பெரும்­பா­லும், சிமென்ட்­டுக்­கான தேவை குறை­வா­கவே இருந்­தது.ஏப்., – செப்., வரை­யி­லான, முதல் காலாண்­டில், ஜி.எஸ்.டி., அறி­மு­கம், மணல் பிரச்னை, ஒரு­சில மாநி­லங்­களில் தொழி­லா­ளர் பற்­றாக்­குறை, ரியல் எஸ்­டேட் ஒழுங்­கு­முறை ஆணைய சட்­டம் அமல் போன்­ற­வற்­றால், கட்­டு­மா­னப் பணி­கள் மந்­த­மாக இருந்­தன.
இத­னால், சிமென்ட் தேவை­யும் குறை­வா­கவே இருந்­தது. இதன் கார­ண­மாக, மே மாதத்­தில், சிமென்ட் விலை சரி­வ­டைந்­தது.

இந்­நி­லை­யில், அக்­டோ­ப­ரில், வடக்கு பிராந்­தி­யத்­தில், சுற்­றுச்­சூ­ழல் மாசு கார­ண­மாக, ‘பெட் கோக்’ எனப்­படும், உயர் வகை நிலக்­கரி பயன்­பாட்­டிற்கு தடை விதிக்­கப்­பட்­டது. இத­னால், சிமென்ட் நிறு­வ­னங்­களின் எரி­பொ­ருள் செலவு உயர்ந்­ததை அடுத்து, அவற்­றின் உற்­பத்­திச் செலவு அதி­க­ரித்­தது. இத­னால், சிமென்ட் விலை உயர்த்­தப்­பட்­டது.

இந்­நி­லை­யில், பண்­டிகை காலம் முடிந்­ததை அடுத்து, நவம்­ப­ரில், சிமென்ட்­டுக்­கான தேவை அதி­க­ரித்­தது. இதை பயன்­ப­டுத்தி, சிமென்ட் விலை மேலும் உயர்த்­தப்­பட்­டது.இந்­திய அள­வில், சிமென்ட் விலை, 0.4 சத­வீ­தம், அதா­வது, மூட்­டைக்கு, 25 – 50 ரூபாய் வரை உயர்ந்­துள்­ளது.

‘நடப்பு நிதி­யாண்­டின் துவக்­கம், சிமென்ட் நிறு­வ­னங்­க­ளுக்கு நன்­றா­கவே இருந்­தது. அனைத்து பிராந்­தி­யங்­க­ளி­லும், சிமென்ட் விலை அதி­க­ரித்­தது. ஆனால், ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­திற்கு முந்­தைய தாக்­கம் கார­ண­மாக, மே முதல், சிமென்ட் விலை சரிந்­தது.‘எனி­னும், இந்­தாண்டு துவக்­கத்­தில் நில­விய, சிமென்ட் விலை­யு­டன் ஒப்­பி­டும் போது, இன்­னும், சிமென்ட் விலை மூட்­டைக்கு, 16 ரூபாய் குறை­வா­கவே உள்­ளது’ என, கோட்­டக் இன்ஸ்­டி­டி­யூ­ஷ­னல் ஈக்­யுட்­டிஸ் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது

எரி­பொ­ருள் விலை உயர்வு, போக்­கு­வ­ரத்து செலவு அதி­க­ரிப்பு போன்­ற­வற்­றால், சிமென்ட் விலை உயர்த்­தப்­பட்ட போதி­லும், நிறு­வ­னங்­களின் லாப வரம்பு குறை­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இத­னால், அம்­புஜா சிமென்ட்ஸ், அல்ட்ரா டெக், ஏ.சி.சி., உள்­ளிட்ட முன்­னணி சிமென்ட் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் பங்கு விலை சரி­வ­டைந்து உள்­ளது.

நல்ல காலம் பிறக்குது

அடிப்­படை கட்­ட­மைப்பு துறை மற்­றும் வீட்­டு­வ­சதி திட்­டங்­க­ளுக்கு, மத்­திய, மாநில அர­சு­கள் அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்­கின்றன. ஜி.எஸ்.டி., தாக்­க­மும் குறைந்­துள்­ளது. இது போன்ற கார­ணங்­க­ளால், வரும் மாதங்­களில், சிமென்ட் தேவை அதி­க­ரிக்­கும். நடப்பு நிதி­யாண்­டில், சிமென்ட் தேவை, 1 சத­வீ­தம் உய­ரும்.

‘இக்ரா’ நிறுவனம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)