கடன் பத்திரங்களில் ரூ.51,000 கோடி திரட்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள்கடன் பத்திரங்களில் ரூ.51,000 கோடி திரட்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ... ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.45 ரூபாயின் மதிப்பும் சரிவு : ரூ.64.45 ...
புதிய ஆலையை துவக்கும் கெம்பிளாஸ்ட் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
00:58

மேட்­டூர்;மேட்­டூர், கெம்­பி­ளாஸ்ட் சன்­மார் நிறு­வ­னம், 100 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், புதி­தாக ஹைட்­ர­ஜன் பெராக்­சைடு ஆலையை துவக்­கு­கிறது.
மேட்­டூ­ரில், 1967ல், கெம்­பி­ளாஸ்ட் சன்­மார் ரசா­யன ஆலை துவங்­கப்­பட்­டது. இதன் வளா­கத்­தி­லுள்ள, நான்கு ஆலை­களில், பி.வி.சி.,ரெசின், காஸ்­டிக் சோடா உள்­ளிட்ட ரசா­யன பொருட்­கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்றன.பஞ்­சாலை கழிவுபொன்­ விழா ஆண்­டில்அடி­யெ­டுத்து வைத்­துள்ள நிலை­யில், ஆலை வளா­கத்­தில் புதி­தாக, 100 கோடி ரூபாய் முத­லீட்­டில், ஆண்­டுக்கு, 53 ஆயி­ரம் டன் உற்­பத்தித் திறனுள்ள, ஹைட்­ர­ஜன் பெராக்­சைடு ஆலையை துவக்­கு­கிறது.
இது குறித்து, ஆலை செயல் இயக்­கு­னர் (இயக்­கம்) வெங்­க­டே­சன் கூறி­ய­தா­வது:ஹைட்­ர­ஜன் பெராக்­சைடு மருந்து பொருட்­கள் தயா­ரிக்­க­வும், உணவு மற்­றும் குளிர்­பா­னங்­கள் கெடா­மல் பாது­காக்­க­வும், கழி­வு­நீர் சுத்­தி­க­ரிக்­க­வும், அழகு சாதன பொருட்­கள் தயா­ரிப்­புக்­கும் பயன்­ப­டு­கிறது. காகி­தக்­கூழ், பஞ்­சாலை கழிவு, சாயப்­பட்­டறை கழி­வு­களை சுத்­தி­க­ரிக்க பயன்­ப­டு­கிறது. தமி­ழ­கத்­தில் கோவை, திருப்­பூர், ஈரோடு, சேலம் மாவட்­டங்­களில், காகித ஆலை, ஜவுளி உற்­பத்தி ஆலை­கள் அதி­க­மாக உள்ளன.இந்த ஆலை­கள், தங்­க­ளுக்கு தேவை­யான ஹைட்­ர­ஜன் பெராக்­சைடை, ஆந்­திர மாநி­லம், சூலுார் பேட்டை, தனி­யார் ஆலை­யில் கொள்­மு­தல் செய்­தன.
அந்த ஆலை மூடப்­பட்ட நிலை­யில், சமீ­ப­கா­ல­மாக, மஹாராஷ்­டி­ரா­வி­லுள்ள தனி­யார் ஆலை­யில் கொள்­மு­தல் செய்­கின்றன. இத­னால், தமி­ழ­கத்­தி­லுள்ள ஜவுளி மற்­றும் காகித உற்­பத்தி ஆலை­க­ளுக்கு செலவு அதி­க­ரிக்­கிறது.

போக்குவரத்து செலவு:மேட்­டூர், கெம்­பி­ளாஸ்ட் ஆலை வளா­கத்­தில், ஹைட்­ர­ஜன் பெராக்­சைடு ஆலை துவக்­கப்­ப­டு­கிறது. இதன் மூலம் தமி­ழ­கத்­தில், ஜவுளி, காகித ஆலை­கள் கொள்­மு­தல் செய்­யும் ஹைட்­ர­ஜன் பெராக்­சை­டுக்­கான போக்­கு­வ­ரத்து செலவு வெகு­வாக குறை­யும்.இந்த ஆலை, 2018ல், இரண்டு அல்­லது மூன்­றாம் காலாண்­டில் உற்­பத்­தியை துவங்­கும்.ஆலை மூலம், 150 ஊழி­யர்­க­ளுக்கு நேர­டி­யா­க­வும், ஏரா­ளமான குடும்­பத்­தி­ன­ருக்கு மறை­மு­க­மா­க­வும் வேலை­வாய்ப்பு கிடைக்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)