பதிவு செய்த நாள்
13 டிச2017
00:14
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, அக்டோபரில், 2.2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, செப்டம்பரில், 4.1 சதவீதம்; ஆகஸ்டில், 4.50 சதவீதம் என, உயர்ந்து இருந்தது.
நடப்பு, 2017–-18ம் நிதியாண்டில், ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதமாக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், தொழில் துறை உற்பத்தியை கணக்கிடும், 23 துறைகளில், 10 துறைகள், 2016 அக்டோபரை விட, அதிக வளர்ச்சியை கண்டுள்ளன.சுரங்கம், தயாரிப்பு மற்றும் மின்துறைகளின் உற்பத்தி, முறையே, 0.2 சதவீதம், 2.5 சதவீதம் மற்றும், 3.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.
அடிப்படை பொருட்கள், பொறியியல் சாதனங்கள், இடைநிலை பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகிய பிரிவுகளின் வளர்ச்சி, முறையே, 2.5 சதவீதம், 6.8 சதவீதம், 0.2 சதவீதம் மற்றும், 5.2 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் கண்டுள்ளன.குறைவான வேலை நாட்கள், தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலத்தையொட்டி, முன்கூட்டியே பொருட்கள் கொள்முதல் செய்தது போன்றவற்றால், அக்டோபரில் தேவைப்பாடும், உற்பத்தியும் குறைந்துள்ளது என, நிர்மல் பேங்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|