இந்­தி­யா­வில் மச­ராட்டி குவாட்­ர­போர்ட்டே ஜி.டி.எஸ்.,இந்­தி­யா­வில் மச­ராட்டி குவாட்­ர­போர்ட்டே ஜி.டி.எஸ்., ... அமெ­ரிக்க வட்டி உயர்வு நம்மை பாதிக்­குமா? அமெ­ரிக்க வட்டி உயர்வு நம்மை பாதிக்­குமா? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வங்­கி­யில் வட்­டியை மட்­டும் பார்த்­தால் போதுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2017
00:13

வைப்பு நிதி கணக்­கு­களின் நம்­ப­கத் தன்மை சார்ந்து, பல சந்­தே­கங்­களை எழுப்பி உள்­ளது, புதிய, எப்.ஆர்.டி.ஐ., மசோ­தா­வின் முதல் வடி­வம்.

பார்லி., குழு­வின் ஆய்­வுக்கு பரிந்­து­ரைக்­கப்­பட்ட இந்த மசோ­தா­வின் வடி­வம், பெரும் சர்ச்­சையை கிளப்பி உள்­ளது. அடிப்­ப­டை­யில், தற்­போது வங்­கி­களில், நாம் முத­லீடு செய்­யும் வைப்பு கணக்­கு­கள், ஒரு லட்­சம் ரூபாய் வரை தான் காப்­பீட்­டால் பாது­காக்­கப் ­படு­கிறது. இது, பல ஆண்­டு­க­ளுக்கு முன் நிர்­ண­யிக்­கப்­பட்ட அளவு. இந்த அளவை, 3.5 லட்­சம் ரூபா­யாக உயர்த்த, இந்த மசோதா பரிந்­துரை செய்கிறது.

ஆனால், மசோ­தா­வின் முற்­போக்கு அம்­சங்­கள் எது­வும், பொது வெளி­யில் பேசப்­ப­டா­மல், அதன் குறை­யாக தோன்­றக்­கூ­டிய சில அம்­சங்­கள் மட்­டுமே முன்­வைக்­கப்­படு­கின்றன.இது, சிறு, குறு முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில், பெரும் அச்சத்தை உரு­வாக்கி உள்ளது. ஏற்­க­னவே, குறைந்து வரும் வட்டி விகி­தங்­க­ளால், பாதிக்­கப்­பட்ட இவர்­கள், தங்­கள் முத­லீ­டு­களை வங்­கி­யில் இருந்தே வெளி­யில் எடுத்து, வேறு இடங்­களில் செலுத்த காட்­டும் அவ­ச­ரம், கவ­லைக்­கி­ட­மா­னது.

ஏற்­க­னவே, வாராக்­க­டன் தொல்­லை­யில் வாடும் பொதுத் துறை வங்­கி­கள், மேலும் பல சிர­மங்­க­ளுக்கு ஆளா­கக்­கூ­டிய சூழல் நில­வு­கிறது. இந்த தவ­றான புரி­தல், அடிப்­ப­டைத்­தன்மை அற்­றது என்­பதை, நாம் முத­லில் புரிந்து கொள்ள வேண்­டும். வங்கி வைப்பு கணக்கை மட்­டுமே நம்பி இருப்­போர், தங்­கள் நம்­பிக்­கையை மாற்­றி­ய­மைக்­கும் போது ஏற்­படும் பிற ஆபத்­து­களை, கருத்­தில் கொள்­ளத் தவ­று­கின்­ற­னர். அடிப்­படை முத­லீட்டு மாற்றங்­களை கையா­ளும் போது, நாம் சந்­திக்­கக் கூடிய ஆபத்­து­களை, முன்­கூட்­டியே ஆய்வு செய்­வது மிக அவ­சி­யம். அதை செய்­யத் தவ­றி­னால், பிற்­கா­லத்­தில் அந்த ஆபத்­து­க­ளால் ஏற்­படும் விளை­வு­கள், நாம் தாங்­கிக் கொள்ள முடி­யாத அளவு அமை­யும். இதை முத­லில் உணர்­வது அவ­சி­யம்.

வைப்பு கணக்கு காப்­பீடு, சரா­சரி முத­லீட்­டா­ளர்­கள் நலன் சார்ந்து மட்­டுமே மாற்றி அமைக்­கப்­படும் என்ற அடிப்­படை நம்­பிக்கை, நம்­மில் தொடர வேண்­டும். வங்­கி­களின் அடிப்­படை இயக்­கம் சீராக அமைய, வைப்பு நிதி காப்­பீடு அதி­கப்­ப­டுத்­தப்­பட வேண்­டும். இந்த மசோதா, நிச்­ச­யம் அதைச் செய்யும் என, எதிர்­பார்க்­க­லாம். புதிய சட்­டங்­கள் அம­லுக்கு வரு­வ­தற்கு முன், அவற்­றின் மீது, பார்லி.,யும், ரிசர்வ் வங்­கி­யும், அதிக கவ­னம் செலுத்­து­வது வழக்­கம். அந்த வழக்­கம் தொடர்­கிறது என்­பதை, முத­லீட்­டா­ளர்­கள் உணர வேண்டும்.

புதிய சட்­டம் மூலம் வங்கி நடப்­பை­யும், முத­லீட்­டா­ளர்­களின் பங்­கை­யும் இணைக்க முற்­ப­டு­வது, ஒரு புதிய முயற்சி. அதை மதிக்க வேண்டும். அதே சம­யம், ஒரு வங்கி எப்­படி இயங்­கு­கிறது என்று கூட ஆய்வு செய்­யா­மல், அதன் வைப்பு கணக்­கில் முதலீடு செய்­யும் கலா­சா­ரம் மாற வேண்­டும்.வெறும் வட்டி விகி­தத்தை மட்­டுமே பார்த்­தும், ஆபத்­து­களை பார்க்­கா­ம­லும் செய்­யும் முத­லீட்டு கலா­சா­ரம், மாற வேண்­டிய அவ­சர சூழலை, நாம் உணர வேண்­டு­வது அவசி­யம்.

வைப்பு கணக்­கு­களில் இருந்து வெளியே வர விரும்­பு­வோர், மிக கவ­ன­மாக பிற முத­லீ­டு­களை ஆய்வு செய்ய வேண்­டும். உரிய ஆலோ­சனை பெற்று, தங்­கள் தேர்­வு­களை மிக கவ­ன­ மாக செய்ய வேண்­டும். வைப்பு கணக்கு பணத்தை பங்கு சந்­தை­யில் செலுத்­தும் போது, நன்கு யோசித்து, தரம் பார்த்து, ஆபத்­து­களை உணர்ந்து முடி­வெ­டுக்க வேண்டும்.

-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)