‘சிறந்த நன்னெறி நிறுவன விருது’ 6வது முறையாக டாடா ஸ்டீல் தேர்வு‘சிறந்த நன்னெறி நிறுவன விருது’ 6வது முறையாக டாடா ஸ்டீல் தேர்வு ...  பிளாக் செயின் தொழில்நுட்பத்தால் கணக்காளர்கள் பணி வாய்ப்பு குறையும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தால் கணக்காளர்கள் பணி வாய்ப்பு குறையும் ...
வரி ஏய்ப்பை தடுப்பதில் தீவிரம் வரும் நிதியாண்டு ஜி.எஸ்.டி., வருவாய் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
00:40

புதுடில்லி:‘மத்­திய அரசு, வரி ஏய்ப்பு தடுப்பு நட­வ­டிக்­கை­களை, மேலும் தீவி­ரப்­ப­டுத்த உள்­ள­தால், 2018 – 19ம் நிதி­யாண்­டில், ஜி.எஸ்.டி., வரு­வாய், மாதம், 1 லட்­சம் கோடி ரூபாயை தாண்டும்’ என, நிதி­யமைச்­சக வட்டா­ரங்­கள் தெரி­வித்து உள்ளன.

ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி, 2017 ஜூலை, 1ல் அம­லுக்கு வந்­தது. அம்­மா­தத்­தில், 95 ஆயி­ரம் கோடி ரூபாய் வசூ­லா­னது. அதன்­பின், டிச., வரை, வரி குறை­வா­கவே வசூ­லாகி உள்­ளது.நடப்பு, பிப்., வரை­யி­லான எட்டு மாதங்­களில், ஜி.எஸ்.டி., மூலம், 4.40 லட்­சம் கோடி ரூபாய் வசூ­லிக்க, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்து உள்ளது. டிச., வரை, மொத்­தம், 5.௨7 லட்சம் கோடி ரூபாய்வசூ­லாகி உள்­ளது.

இலக்கு

இத்­து­டன், மார்ச் வரை­யி­லான, நடப்பு காலாண்டு வரு­வாயை சேர்த்­தால், மொத்த வரி வசூல், மேலும் அதி­க­ரிக்­கும். இருந்த போதி­லும், இதில் திரும்ப அளிக்­கப்­படும் கூடு­தல் வரியை கணக்­கிட்­டால், நிகர வரி வரு­வாய், நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை எட்­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இது குறித்து, நிதி­யமைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:

ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­லில் உள்ள, பெரும்­பா­லான பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட்டு உள்­ளது. விரை­வில், கணக்கு தாக்­கல் நடை­மு­றை­யில், சிறி­தும் பிசி­றில்­லா­மல், முழு­மை­யான ஸ்தி­ரத்­தன்மை உண்­டா­கும்.இத்­து­டன், சரக்கு போக்கு­வ­ரத்­துக்­கான,‘இ – வே பில்’ எனப்­படும், மின் வழிச் சீட்டு நடை­முறை­யும், நாடு முழு­வ­தும் அம­லுக்கு வந்து விடும். இத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்­தில், வரி முறை­கே­டு­கள் முடி­விற்கு வரும்.இத்­து­டன், வரி ஏய்ப்பு தடுப்பு நட­வ­டிக்­கையை மேலும் தீவி­ரப்­ப­டுத்­த­வும், அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, டி.ஜி.ஏ.ஆர்.எம்., என்ற அமைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்ளது.

ஒப்­பீடு

இந்த அமைப்பு, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­தோ­ரின் விப­ரங்­களை சேக­ரித்து, அவர்­கள் தாக்­கல் செய்த, வரு­மான வரி கணக்­கு­டன் ஒப்­பிட்டு பார்க்­கும்.இந்த தக­வல் ஒப்­பீட்­டிற்­காக, செயற்கை நுண்­ணறிவு சாப்ட்­வேர் உள்­ளிட்ட நவீன வழி­முறை­கள் பின்­பற்­றப்­படும். இதன் மூலம், வரி ஏய்ப்பு செய்­வோர் அடை­யா­ளம் காணப்பட்டு தண்டிக்­கப்­ப­டு­வர்.அது­மட்­டு­மின்றி, தங்­கத்­திற்கு, 10 சத­வீத சுங்க வரி உள்ள போதி­லும், அதன் இறக்­கு­மதி, மாதந்­தோ­றும் அதி­க­ரிக்­கிறது.

இது குறித்­தும், வருவாய் புல­னாய்வு அதிகா­ரி­கள் கண்­கா­ணிக்கஉள்­ள­னர்.ஜி.எஸ்.டி., மூலம், இறக்­கு­ம­தி­யா­கும் தங்­கம், நுகர்­வோரை சென்­ற­டை­வது வரை உள்ள கணக்கு விப­ரங்­களை, புல­னாய்வு செய்ய முடி­யும். இந்த தக­வல்­களும், வரு­மான வரித்­து­றை­யு­டன் பகிர்ந்து கொள்­ளப்­படும்.

இது போன்ற நட­வ­டிக்­கை­க­ளால், வரும் நிதி­யாண்­டில், ஜி.எஸ்.டி., வரு­வாய், மாதம் சரா­ச­ரி­யாக, 1 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சேலம்:தீபா­வளி பண்­டிகை முடிந்த நிலை­யில், சர்க்­கரை விலை சரி­யும் என்ற எதிர்­பார்ப்பு இருந்த நிலை­யில், வட ... மேலும்
business news
பீஜிங்:சீனாவின், ஐ.சி.பி.சி., வங்கி, இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், 1,460 கோடி ரூபாய் முதலீடு செய்ய ... மேலும்
business news
புதுடில்லி:'பிளிப்கார்ட்' குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, பின்னி பன்சால் நேற்று திடீரென ராஜினாமா ... மேலும்
business news
வாழப்பாடி:‘புதிதாக தொழில் துவங்குவோர், 10 சதவீத தொகையை முதலீடு செய்தால் போதும்,’’ என, கோவை, பொது சேவா மைய இணை ... மேலும்
business news
புதுடில்லி:தீபாவளி பண்டிகை கால விற்பனை முடிந்ததால், பல நிறுவனங்கள், ‘ஸ்மார்ட் போன்’ விலையை உயர்த்தத் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)