மொத்த விலை பணவீக்கம்: 6 மாதங்களில் காணாத சரிவு மொத்த விலை பணவீக்கம்: 6 மாதங்களில் காணாத சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயரும் ‘ஆன்லைன்’ நுகர்வோரின் செலவினம் ரூ.6.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2018
00:23

மும்பை:‘அடுத்த மூன்று ஆண்­டு­களில், ‘ஆன்­லைன்’ நுகர்­வோ­ரின் செல­வி­னம், இரண்­டரை மடங்கு உயர்ந்து, 6.50 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கும்’ என, ஆய்­வொன்­றில்
தெரி­ய­வந்­துள்­ளது.

வலை­த­ளங்­கள் வாயி­லாக பொருட்­கள் மற்­றும் சேவை­களை பெறு­வோர், ‘ஆன்­லைன்’ நுகர்­வோர் ஆவர். அத்­த­கை­யோ­ரின் செல­வி­னம் குறித்து, கூகு­ளு­டன் இணைந்து, பாஸ்­டன் கன்­சல்­டிங் குரூப் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:

இந்­தி­யா­வில், வலை­த­ளம் வாயி­லான மின்­னணு வர்த்­த­கம் பர­வ­லாகி வரு­கிறது. இதில், நிதிச் சேவை­கள், சுற்­றுலா மற்­றும் ஹோட்­டல் துறை­களின் வளர்ச்சி சிறப்­பாக உள்­ளது. ‘டிஜிட்­டல்’ எனப்­படும் மின்­னணு தொழில்­நுட்­பம் சார்ந்த ஊட­கங்­களின் பயன்­பா­டும் பெரு­கி­யுள்­ளன.
அத­னால், வலை­த­ளங்­கள் வாயி­லான நுகர்­வோ­ரின் செலவு, 2020ல், தற்­போது உள்­ளதை விட, இரண்­டரை மடங்கு உயர்ந்து, 4,000 கோடி டால­ரில் இருந்து, 10 ஆயி­ரம் கோடி டால­ராக, அதா­வது, ரூபாய் மதிப்­பில், 6.50 லட்­சம் கோடி­யாக அதி­க­ரிக்­கும்.

இதில், ஆடை­கள், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு பொருட்­கள், நுகர்­வோர் மின்­னணு சாத­னங்­கள், உணவு மற்­றும் மளி­கைப் பொருட்­கள், பெரும் பங்கு வகிக்­கும்.இப்­பி­ரி­வில், நுகர்­வோ­ரின் செல­வி­னம் தற்­போது, 1,800 கோடி டால­ராக உள்­ளது. இது, 2020ல், 4,000 –- 4,500 கோடி டால­ராக உய­ரும்.இதே காலத்­தில், சுற்­றுலா மற்­றும் ஓட்­டல்­க­ளுக்கு, வலை­த­ளம் வாயி­லாக பணம் செலுத்­து­வது, 1,100 கோடி டால­ரில் இருந்து, 2,000 கோடி டால­ராக அதி­க­ரிக்­கும்.

மின்­னணு ஊட­கங்­க­ளுக்கு, நுகர்­வோர் செல­வி­டு­வது, 20 கோடி டால­ரில் இருந்து, 57 கோடி டால­ராக வளர்ச்சி காணும்.குறைந்த விலை ஸ்மார்ட்­போன்­கள், அவற்­றில் பெரும்­பா­லான மொழி­களில் கிடைக்­கும் தக­வல்­கள் போன்­ற­வற்­றால், வலை­த­ளங்­களை பார்­வை­யி­டு­வோர்
அதி­க­ரித்­துள்­ள­னர். இதன் கார­ண­மாக, நான்கு ஆண்­டு­களில், வலை­த­ளங்­களை பயன்
­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து, 43 கோடி­யாக பெருகி உள்­ளது.

இது, மேலும் வளர்ச்சி காண, சிறிய நக­ரங்­களில் உள்ள பெண்­கள் மற்­றும் 35 வய­திற்­கும் மேற்­பட்­டோர் துணை புரி­வர்; வலை­தள பொருட்­களை வாங்­கு­வ­தில், இத்­த­கை­யோ­ரின் பங்கு, 2020ல், முறையே, 2.5 மற்­றும் 3 மடங்கு அதி­க­ரிக்­கும்.பெரு­ந­க­ரங்­களை தாண்டி, சிறிய நக­ரங்­களில் அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­கள் பெரு­கி­யுள்­ள­தால், வலை­த­ளங்­களில் அதி­க­மா­னோர் பொருட்­கள் வாங்­கு­கின்­ற­னர்.

வலை­த­ளங்­களில் பொருட்­கள் வாங்­கி­னா­லும், 20 சத­வீ­தம் பேர் தான், மொத்த செல­வில், 60 – -65 சத­வீ­தம், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

வளர்ச்சி

நுகர்­வோர்­கள், வலை­த­ளங்­கள் குறித்த விழிப்­பு­ணர்வை பெற்று, தற்­போது முதல்
பொருளை வாங்­கு­வது வரை முன்­னே­றி­யுள்­ள­னர். அடுத்து, அவர்­கள் சர்­வ­சா­தா­ர­ண­மாக,
வலை­தள பொருட்­கள் வாங்­கு­வோ­ராக மாற வேண்­டும். இப்­படி, ஒவ்­வொரு கட்­டத்­திற்­கும் வெவ்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டால், வலை­தள வர்த்­த­கம் வளர்ச்சி காணும்

நிமிஷா ஜெயின்

இயக்குனர், பி.சி.ஜி., இந்தியா

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
சென்னை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மார்ச் 23) தங்கம் விலையில் உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை ... மேலும்
business news
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ... மேலும்
business news
புதுடில்லி : மத்­திய அரசு, பட்டு வளர்ப்பு துறைக்கு என, ‘பட்­டுத் தொழில் மேம்­பாட்­டிற்­கான ஒருங்­கி­ணைந்த ... மேலும்
business news
மும்பை : ‘‘நாட்­டின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, சேவை­கள் துறை­யில், 12 முக்­கிய பிரி­வு­களை ஊக்­கு­விக்க, அரசு ... மேலும்
business news
ஐதராபாத் : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, அத­னு­டன் இணைக்­கப்­பட்ட ஐந்து வங்­கி­க­ளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)