பதிவு செய்த நாள்
17 பிப்2018
00:13
புதுடில்லி : எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, 426 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இப்பங்கு வெளியீடு, 26ல் துவங்கி, 28ல் முடிவடைகிறது. ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை, 263 ரூபாய்; அதிகபட்ச விலை, 270 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் தொகை, பொறியியல் சாதனங்கள் வாங்கவும், பழைய கடன்களை திரும்பத் தரவும், இதர வர்த்தக செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும்’ என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பங்கு வெளியீட்டை, எஸ்.பி.ஐ., கேப்பிடல் மார்க்கெட்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி ஆகியவை நிர்ணயிக்கின்றன.முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம், அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த கட்டுமானம், மேம்பாடு மற்றும் நிர்வாகத்தில் ஈடுபட்டு வருகிறது. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றின் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன், நீர் குழாய் பதிப்பு பணியிலும் கால் பதித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|