ஐ.டி., துறை வருவாயில் மாற்றமிருக்காது: ‘நாஸ்காம்’ஐ.டி., துறை வருவாயில் மாற்றமிருக்காது: ‘நாஸ்காம்’ ... தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டம்  காப்பீட்டு பிரீமியம் குறைகிறது தேசிய ஆரோக்கிய பாதுகாப்பு திட்டம் காப்பீட்டு பிரீமியம் குறைகிறது ...
ரூ.11,400 கோடி மோசடி எதிரொலி: பி.என்.பி., கடன் தகுதி மதிப்பை குறைக்க, ‘மூடிஸ்’ நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
00:32

மும்பை : பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யில் நடந்த, 11,400 கோடி ரூபாய் மோச­டியை தொடர்ந்து, அவ்­வங்­கி­யின் கடன் தகுதி மதிப்­பீட்டை குறைப்பது குறித்த ஆய்வை துவக்கி உள்­ள­தாக, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் இன்­வெஸ்­டர்ஸ் சர்வீசஸ்’ தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: பி.என்.பி.,யின் ஒட்டு மொத்த செயல்­பா­டு­களின் அடிப்­ப­டை­யில், நிதி ஸ்தி­ரத்­தன்­மையை குறிக்­கும், ‘பி ஏ ஏ – 2’ குறி­யீடு வழங்­கப்­பட்டு உள்­ளது. மோசடி வெளிச்­சத்­திற்கு வந்­த­தால், இந்த மதிப்­பீட்டை குறைக்­க­லாமா என, ஆய்வு செய்­யும் பணி துவங்கி உள்­ளது. முத­லா­வ­தாக, மோசடி பரி­வர்த்­த­னை­க­ளால், வங்­கி­யின் நிதி­யா­தா­ரத்­தில் ஏற்­படும் தாக்­கம் ஆரா­யப்­படும். அடுத்து, வங்­கி­யின் பங்கு மூல­த­னத்தை மேம்­ப­டுத்த, நிர்­வாக ரீதி­யில் எடுக்­கப்­படும் நட­வடிக்­கை­கள், கவ­னத்­தில் கொள்ளப்­படும்.

மூன்­றா­வ­தாக, வங்கி மீது, ரிசர்வ் வங்கி ஏதா­வது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கி­றதா என, பார்க்­கப்­படும். இத்­து­டன், வங்­கி­யின் அடிப்­படை கடன் மதிப்­பீடு, அதன்­படி வழங்­கப்­பட்ட, ‘பி ஏ – 3’ குறி­யீடு மற்­றும் இடர்ப்­பாட்டு மேலாண்­மைக்­கான, ‘பி ஏ ஏ – 3’ குறி­யீடு ஆகி­ய­ வற்றை குறைப்­பது குறித்­தும் ஆராய முடிவு செய்யப்­பட்டு உள்­ளது. பல ஆண்­டு­க­ளாக, போலி கடன் பொறுப்­பேற்பு ஆவ­ணங்­கள் மூலம், வங்­கி­யில், 180 கோடி டாலர் அள­விற்கு நடை­பெற்ற மோச­டி­யால், வங்­கி­யின் கடன் சுமை அதி­க­ரிக்க வாய்ப்பு உள்ளது.

இதன் கார­ண­மா­கவே, வங்­கி­யின் கடன் தகுதி மதிப்­பீட்டை குறைப்­பது தொடர்­பான ஆய்வு நடக்கிறது. இந்த மோசடி பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான பொறுப்­பேற்பு மற்­றும் நிதி தாக்­கத்தை, சட்­டம் தீர்­மா­னிக்­கும். இருந்த போதி­லும், மோசடி தொகை­யில், குறைந்­த­பட்­சம் குறிப்­பி­டத்­தக்க தொகையை, வங்கி செலுத்த வேண்டி இருக்­கும் என, கரு­தப்­ப­டு­கிறது. அத­னால், வங்­கி­யின் லாபம் பாதிக்­கப்­படும். எனி­னும் அது, மோசடி பணத்தை திரும்­பப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை சார்ந்தே உள்­ளது.

வங்கி, மோசடி தொகை முழு­வ­தை­யும் செலுத்த நேர்ந்­தால், அதன் மூல­தன இருப்பு விகி­தம், ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்­ததை விட குறை­யும். அதை, வங்கி ஈடு­செய்ய நேரி­டும். அது­மட்­டு­மின்றி, 2019 மார்ச்­சுக்­குள், ‘பேசல் – 3’ விதி­க­ளின்­படி, வங்கி, குறைந்­த­பட்­சம், 8 சத­வீத மூல­தன இருப்பு விகி­தத்தை பரா­ம­ரிக்க வேண்டும். இத்­த­கைய சூழ­லில், பங்கு மூல­த­னத்தை உயர்த்த, மத்­திய அர­சி­டம் நிதி கோர நேரும்.

மோச­டி­யால், வங்­கி­யின் பங்கு விலை, 30 சத­வீ­தத்­திற்­கும் மேலாக சரிந்­துள்­ளது. அத­னால், பங்­குச் சந்­தை­யில் ஓர­ள­விற்கே நிதி திரட்ட முடி­யும். இத்­த­கைய அம்­சங்­களை கருதி, வங்­கி­யின் கடன் தகுதி மதிப்­பீட்டை குறைப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

‘பிட்ச்’ நிறுவனமும்...
அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘பிட்ச் ரேட்­டிங்ஸ்’ நிறு­வ­ன­மும், பஞ்­சாப் நேஷ­னல் வங்­கி­யின், கடன் தகுதி மதிப்­பீட்டை குறைப்­பது குறித்த ஆய்வை துவக்கி உள்­ளது. இதற்­காக, பாத­கம் ஏற்­ப­டக் கூடிய நிறு­வ­னங்­களை கண்­கா­ணிக்­கும் பிரி­வில், வங்கி சேர்க்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)