கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 5.4 கோடி டன்கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி 5.4 கோடி டன் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ...
மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பெருமிதம் சர்வதேச வர்த்தக உறவுகளை மேம்படுத்த அதிகபட்ச தாராளமயத்தை கடைபிடிக்கிறது இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2018
00:21

சிங்கப்பூர்:‘‘இந்­தியா, சர்­வ­தேச நாடு­க­ளு­டன் வர்த்­தக நல்­லு­றவை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், அதி­க­பட்ச தாரா­ள­மய கொள்­கையை கடை­பி­டிக்­கிறது,’’ என, மத்­திய வர்த்­த­கம்மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்து உள்­ளார்.அவர், சிங்­கப்­பூ­ரில், பொரு­ளா­தார அமைச்­சர்­கள் மாநாட்­டில் பங்­கேற்று, ‘இந்­திய பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்­களும், சர்­வ­தேச ஒருங்­கி­ணைப்­பும்’ என்ற தலைப்­பில் பேசி­ய­தா­வது:

உல­கில், அதிக அள­வி­லான தாரா­ள­ம­ய­மாக்­கல் கொள்­கை­களை பின்பற்­றும் நாடு­களில் ஒன்­றாக, இந்­தியா விளங்­கு­கிறது. பாது­காப்பு துறை உட்­பட அனைத்து துறை­க­ளி­லும், அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­கள் வெகு­வாக தளர்த்­தப்­பட்டு உள்­ளன. அனைத்து நாடு­க­ளு­டன்,வர்த்­தக உறவை ஏற்ப­டுத்­திக் கொள்­ள­வும், ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­ள­வும், இந்­தியா மிக ஆர்­வ­மாக உள்­ளது.

குறிப்­பாக, தென் கிழக்கு ஆசிய நாடு­க­ளின் கூட்­ட­மைப்­பான, ‘ஆசி­யான்’ உடன் இணைந்து செய­லாற்ற விரும்­பு­கிறது. இந்த அமைப்பு மட்­டு­மின்றி, ஆர்.சி.இ.பி., எனப்­படும், பிராந்­திய ஒருங்­கி­ணைந்த பொரு­ளா­தார கூட்­ட­மைப்­பி­லும், அதிக பங்­க­ளிப்பை இந்­தியா வழங்­கும். இந்த அமைப்பு தொடர்­பாக, இதர அண்டைநாடு­க­ளு­டன் கூட்­டாக செயல்­ப­ட­வும் ஆர்­வ­மாக உள்­ளது.எந்த அள­விற்கு முடி­யுமோ, அந்த அள­விற்கு அண்டை நாடு­க­ளு­டன், பரஸ்­ப­ரம் மற்­றும் பன்­முக பரஸ்­பர ஒப்­பந்­தங்­களை ஏற்­ப­டுத்­து­வது தான், இந்­தி­யா­வின் முக்­கிய நோக்­கம்.

இதன் மூலம், இந்­தியா உடன் சேர்ந்து பல நாடு­கள்பய­ன­டை­யும். இத்­த­கைய ஒப்­பந்­தங்­களை இறுதி செய்­வது கடி­னம் என்­றா­லும், அந்த முயற்­சி­யில் பங்­கேற்க, இந்­தியா எப்­போ­தும் தயா­ரா­கவே உள்­ளது. எல்­லாம் நல்­ல­ப­டி­யாக நடக்­கும் என்ற நம்­பிக்­கை­யும் உள்­ளது.சிங்­கப்­பூ­ராக இருந்­தா­லும், ஆசி­யான் மற்­றும், ஆர்.சி.இ.பி., உறுப்பு நாடு­க­ளாக இருந்­தா­லும், எந்த பேச்­சி­லும், உள்­நாட்டு நல­னுக்­குத் தான் அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும். இது, இந்­தி­யா­விற்­கும் பொருந்­தும்.

எனி­னும், ஒன்­றாக இணைந்து செயல்­ப­டு­வ­தற்­கான வழி­மு­றை­களை உரு­வாக்க வேண்­டி­யதுஅவ­சி­ய­மா­கும்.உலக வர்த்­தக அமைப்பு, வெற்­றி­க­ர­மாக, சர்­வ­தேச வர்த்­த­கத்தை ஒருங்­கி­ணைத்து உள்­ளது. அது போல, நாம், பன்­முக பரஸ்­பர வணி­கத்­திற்கு, சர்­வ­தேச அள­வில், நவீன வர்த்­தக செயல் திட்­டத்தை உரு­வாக்க வேண்­டும்.அது, உள்­நாட்டு நலனை பாதிக்­காத வகை­யில், சர்­வ­தேச நாடு­க­ளின் ஒருங்­கி­ணைப்­பு­டன் செயல்­படும் திட்­ட­மாக இருக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஆசியான் – ஆர்.சி.இ.பி.,

‘ஆசி­யான்’ எனப்­படும், தென் கிழக்கு ஆசிய நாடு­கள் கூட்­ட­மைப்­பில், இந்­தோ­னே­ஷியா, மலே­ஷியா, பிலிப்­பைன்ஸ், சிங்­கப்­பூர், தாய்­லாந்து, புருனே, கம்­போ­டியா, லாவோஸ், மியான்­மர், வியட்­நாம் ஆகிய, 10 நாடு­கள் இடம் பெற்­றுள்­ளன. இவற்­று­டன், இந்­தியா, சீனா, ஜப்­பான், தென் கொரியா, ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து ஆகிய நாடு­களை உள்­ள­டக்­கிய அமைப்­பாக, ஆர்.சி.இ.பி., விளங்­கு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)