‘டிஜிட்டல் வாலெட்’­க­ளுக்­கு கே.ஒய்.சி., அவ­சியம்‘டிஜிட்டல் வாலெட்’­க­ளுக்­கு கே.ஒய்.சி., அவ­சியம் ... பங்குச் சந்தை  வளர்ச்­சிக்கு உத­வாது வர்த்­தக போர்! பங்குச் சந்தை வளர்ச்­சிக்கு உத­வாது வர்த்­தக போர்! ...
என்.பி.எஸ்., திட்­டத்தில் சம பங்கு முத­லீடு உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
00:32

ஓய்வு கால முத­லீ­டான, என்.பி.எஸ்., திட்­டத்தில், சம பங்கு முத­லீட்டை அதி­க­ரிக்கும் வகையில் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள மாற்றம் ஈர்ப்­பு­டை­ய­தாக இருக்­குமா?
தேசிய பென்ஷன் திட்­டத்தை (என்.பி.எஸ்.,) நிர்­வ­கிக்கும் பென்ஷன் நிதி ஒழுங்­கு­முறை மற்றும் மேம்­பாட்டு ஆணையம், இந்த திட்­டத்தில், சம பங்கு முத­லீட்டு அளவை அதி­க­ரிப்­ப­தற்­கான மாற்­றத்தை உத்­தே­சித்­துள்­ளது. இது தொடர்­பான கருத்­தாக்க குறிப்பை வெளி­யிட்டு, ­மக்­களின் கருத்­துக்­களை ஆணையம் கோரி­உள்­ளது. இந்த மாற்றம், ‘ஆக்டிவ் சாய்ஸ்’ எனும் விருப்ப முத­லீட்டு தேர்வு வாய்ப்பை நாடு­ப­வர்க­ளுக்கு ஈர்ப்­பு­டை­ய­தாக இருக்­கலாம் என கரு­தப்­ப­டு­கி­றது.

மேலும், 60 வயதில் சம பங்கு முத­லீடு, 50 சத­வீ­தத்­திற்கு மேல் இருக்­காத வகையில், 50 வயதில் இருந்து சம பங்கு முத­லீடு குறையும் வகை­யிலும் மாற்றம் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.ஓய்வு காலத்­திற்­கான, என்.பி.எஸ்., திட்­டத்தில் தற்­போது, அரசு பத்­திர நிதி (ஸ்கீம் – ஜி), வர்த்­தக பத்­தி­ரங்கள் நிதி (ஸ்கீம் – சி) சம பங்கு நிதி (ஸ்கீம் – இ) மற்றும் மாற்று முத­லீட்டு நிதி (ஸ்கீம் – ஏ) என, நான்கு வித­மான நிதிகள் உள்­ளன. இவற்றில் இரண்டு வித­மாக முத­லீடு செய்­யலாம்.

வாழ்க்கை கால­கட்ட நிலைக்கு ஏற்ப முன்­கூட்­டியே தீர்­மா­னிக்­கப்­பட்ட முறையில் முத­லீடு செய்­யலாம். ‘லைப் சைக்கிள்’ திட்டம் என, இவை குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இரண்­டா­வது வாய்ப்பு, ‘ஆக்டிவ் சாய்ஸ்’ என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இதன் கீழ், நான்கு நிதி­களில் அவற்றின் வரம்­பிற்கு ஏற்ப விரும்­பிய விகி­தத்தில் முத­லீடு செய்­யலாம். இந்த முறையில் சம பங்கு முத­லீட்டை அதி­க­ரித்துக் கொள்­ளலாம் என்­றாலும், இதற்கும், 50 சத­வீதம் வரம்பு உண்டு. இந்த வரம்பை தான் தற்­போது, 75 சத­வீ­த­மாக உயர்த்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கான யோசனை ஏற்­க­னவே வல்­லுனர் குழுவால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் இருந்து இதற்­கான கோரிக்­கை அதிக அளவில் வந்­துள்­ள­தாக பென்ஷன் ஆணையம் தெரி­வித்­துள்­ளது.அதிக அள­வி­லான சம பங்கு முத­லீடு, உறுப்­பி­னர்­க­ளுக்கு அதிக பலன் அளிக்க வாய்ப்­புள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது. என்.பி.எஸ்., திட்­டத்தில் நிதிக்­கான நிர்­வாக கட்­ட­ணமும் குறை­வாக உள்­ளது. எனவே, உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள மாற்றம் ஈர்ப்­பு­டை­ய­தாக அமை­யலாம் என கரு­தப்­ப­டு­கி­றது.
குறிப்­பாக, இளம் வய­தி­ன­ருக்கு மிகவும் ஏற்­ற­தாக இருக்கும். இந்த முத­லீட்­டிற்கு கூடு­த­லாக 50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை இருப்­பதும் சாத­க­மான அம்­ச­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது.எனினும், என்.பி.எஸ்., திட்­டத்தில் அதி­க­பட்­ச­மாக, 60 சத­வீத தொகையை மட்­டுமே விலக்­கிக்­கொள்ள அனு­ம­திக்­கப்­படு­வது, பலரை யோசிக்க வைக்­கி­றது. 40 சத­வீத தொகையை ஓய்­வூ­திய காப்­பீட்டு திட்­டத்தில் முத­லீடு செய்­வது கட்­டாயம்.
இவை தரும் பலன் குறை­வாக இருப்­ப­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது. அதிலும், பல ஆண்­டு­க­ளுக்குப் பின், வட்டி விகித போக்­கிற்கு ஏற்ப ஓய்­வூ­திய பலன் குறை­வாக இருக்­கலாம்.மேலும், 50 வய­துக்கு மேல் சம பங்கு அளவு குறை­வது பாத­க­மா­னது என, சில வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். 50 வயதில் தீவி­ரமாக முத­லீடு செய்ய, 10 ஆண்­டுகள் மட்­டுமே இருப்­பதால், முத­லீடு தேர்வை உறுப்­பி­னர்­க­ளி­டமே விடப்­பட வேண்டும் என, வல்­லு­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.

எனினும், சம பங்கு அளவு உயர்­வ­தற்­கான வாய்ப்பு வர­வேற்­கத்­தக்க மாற்றம் என கரு­தப்­ப­டு­கி­றது. அதே நேரத்தில், இந்த திட்­டத்தை மட்­டுமே ஓய்­வூ­திய காலத்­திற்­கான ஒற்றை வாய்ப்­பாக கரு­தாமல், பர­வ­லாக இருக்கும் வகையில் ஓய்­வூ­திய திட்டம் வகுக்­கப்­பட வேண்டும் என்றும் ஆலோ­சனை சொல்­கின்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)