பதிவு செய்த நாள்
26 மார்2018
04:05
சுற்றுலாத்துறை உலகம் முழுவதும் ஏழு மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாகவும், கடந்த ஆண்டு சுற்றுலாத்துறைக்கு சிறந்த ஆண்டாக அமைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
டபிள்யூ.டி.டி.சி., அமைப்பு பொருளாதார தாக்க ஆய்வு தொடர்பான ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை சுற்றுலாத்துறை வேலை வாய்ப்பை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவிக்கிறது. உலக அளவில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகளில் ஐந்தில் ஒன்று சுற்றுலாத்துறை மூலம் உருவாவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலக பொருளாதாரத்தைவிட சுற்றுலாத் துறை அதிக வளர்ச்சி கண்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு சுற்றுலாத் துறைக்கு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை வளர்ச்சி, 4.6 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|