பொது காப்­பீடு பிரீமியம் உயர்வுபொது காப்­பீடு பிரீமியம் உயர்வு ...  உங்கள் விடு­முறை பய­ணத்­திற்­காக திறம்­பட சேமிப்­ப­தற்­கான வழிகள்! உங்கள் விடு­முறை பய­ணத்­திற்­காக திறம்­பட சேமிப்­ப­தற்­கான வழிகள்! ...
உங்கள் விடு­முறை பய­ணத்­திற்­காக திறம்­பட சேமிப்­ப­தற்­கான வழிகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
00:23

பெரும்­பா­லானோர் விடு­முறை பய­ணங்­களை தங்­க­ளது நிதி திட்­ட­மி­டலில் சேர்த்­துக்­கொள்­வ­தில்லை. ஆனால், சுற்­றுலா பய­ணங்­க­ளுக்கும் சேர்த்தே திட்­ட­மிட வேண்டும். அதா­வது, பய­ணங்­க­ளுக்கு என்று முன்­கூட்­டியே திட்­ட­மிட்டு சேமிக்க வேண்டும். பய­ணத்­திற்­காக என கடன்­ப­டு­வதை தவிர்க்­கலாம் என்­ப­தோடு, விரும்­பிய பட்­ஜெட்டில் சுற்­று­லாவை அனு­ப­விக்­கலாம். இதற்­கான வழிகள்:
பயண நிதி: சுற்­றுலா பயணம் மேற்­கொள்ள என தனியே நிதியை ஏற்­ப­டுத்திக் கொள்­வதில் பல­வித அனு­கூ­லங்கள் உள்­ளன. கைவசம் போதிய நிதி இருந்தால், விடு­முறை கால சலுகை திட்­டங்கள் வெளி­யாகும் போது, பதிவு செய்து பலன் பெறலாம். கடன் வாங்கும் அவ­சி­யமோ, கையில் உள்ள தொகை போது­மா­ன­தாக இருக்­குமோ என்ற சந்­தே­கமே உண்­டாக வாய்ப்­பில்லை.
எப்படி சேமிப்­பது: அடுத்த ஆண்டு அல்­லது இரண்டு ஆண்­டு­க­ளுக்குப் பின் சுற்­றுலா செல்ல, இப்­போதே சேமிக்கத் துவங்க வேண்டும். குறு­கிய கால சுற்­றுலா எனில், சில மாதங்­க­ளுக்கு முன்­பேனும் சேமிக்க வேண்டும். சுற்­றுலா பய­ணத்­திற்­கான பட்­ஜெட்­டிற்கு ஏற்ப, மாதம் ஒரு குறிப்­பிட்ட தொகையை சேமித்து வர வேண்டும். இந்த தொகையை சேமிப்பு கணக்­கிலும் வைத்­தி­ருக்­கலாம் அல்­லது தொடர் வைப்பு நிதி போன்­ற­வற்­றிலும் சேமிக்­கலாம்.
எவ்­வ­ளவு சேமிப்­பது: சுற்­றுலா நிதி­யாக எவ்­வ­ளவு தேவை என்­பது, ஒருவர் தேர்வு செய்யும் இடம் மற்றும் விடு­முறை கால அளவை பொறுத்து அமையும். அதற்­கேற்ப மாதந்­தோறும் ஒரு தொகையை சேமிக்க வேண்டும். கைவசம் பெரிய தொகை இருந்தால் அதை வைப்பு நிதி அல்­லது ‘லிக்விட் பண்ட்’ திட்­டங்­களில் போட்டு வைக்­கலாம். இவற்றின் மீதான பலன் கூடுதல் நிதி­யாக அமையும்.
செலவு கட்­டுப்­பாடு: சுற்­று­லா­வுக்கு என தனியே நிதி ஒதுக்கும் பழக்கம் இல்­லா­த­வர்­க­ளுக்கு, மாதந்­தோறும் இதற்­கென ஒரு தொகையை சேமிப்­பது கஷ்­ட­மாக இருக்­கலாம். எனவே, மாதச் செல­வு­களை கண்­கா­ணித்து தேவை­யில்­லாத செல­வு­களை தவிர்ப்­பதன் மூலம், அந்த தொகையை சுற்­று­லா­வுக்­காக சேமிக்­கலாம். இதன் மூலம் வீட்டு பட்­ஜெட்­டையும் மேம்­ப­டுத்திக் கொள்­ளலாம்.
பயண அனு­பவம்: சுற்­றுலா பய­ணத்­தையும் ஒரு முக்­கிய நிதி இலக்­காக கொள்ள வேண்டும். விடு­முறை பய­ணத்தை வெறும் செல­வாக மட்டும் பார்க்கக் கூடாது. இவை மனதில் நிற்கும் மிகச் சிறந்த அனு­ப­வங்­க­ளாக அமையும். உண்­மையில், இத்­த­கைய அனு­ப­வங்­க­ளுக்­காக செலவு செய்­வ­தற்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்டும் என, வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. பயண அனு­பவம் தரும் புத்­து­ணர்ச்சி, பணி அழுத்­தத்தில் இருந்து விடு­பட உதவும்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி: அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவ­னம், ‘அமே­சான், வால்­மார்ட்’ நிறு­வனங்­களை பின்­பற்றி, ... மேலும்
business news
புது­டில்லி: இந்­தி­யா­வில், விரை­வில் துவக்­க­வுள்ள பணப் பரி­வர்த்­தனை சேவை தொடர்­பான விதி­மு­றை­களை ... மேலும்
business news
கோவை: ‘இந்­திய சந்­தை­யில் செம்பு உலோ­கத்­தின் விலை உயர்ந்­தி­ருப்­ப­தால், கோவை­யில் உற்­பத்­தி­யா­கும் ... மேலும்
business news
கோவை: ‘இந்­திய சந்­தை­யில் செம்பு உலோ­கத்­தின் விலை உயர்ந்­தி­ருப்­ப­தால், கோவை­யில் உற்­பத்­தி­யா­கும் ... மேலும்
business news
புதுடில்லி: ‘‘பிற நாடு­க­ளு­டன் வர்த்­த­கம் தொடர்­பான அனைத்து பிரச்­னை­க­ளுக்­கும், சுமுக தீர்வு காணப்­படும்,’’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)