பதிவு செய்த நாள்
23 ஏப்2018
00:39
இந்திய சுற்றுலா பயணியர் வழக்கமான இடங்களுடன், புதிய சுற்றுலா தளங்களையும் ஆர்வத்துடன் நாடி வருவது தெரிய வந்துள்ளது.
ஹோட்டல்ஸ்.காம் நிறுவனம் சுற்றுலா பயணியர் ஆர்வம் தொடர்பான ஹோட்டல் பிரைஸ் இண்டக்ஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பயணியரின் தங்குமிட செலவு சிறிதளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய சுற்றுலா பயணியரைப்பொருத்தவரை, ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளை விரும்பி நாடுவதோடு, இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் ஆகிய புதிய இடங்களையும் நாடத்துவங்கியுள்ளனர். கத்தாரின் தோஹா, சீனாவின் போஷன் ஆகிய இடங்களும் இந்தியர்கள் அதிகம் நாடும் முதல் 100 இடங்களில் உள்ளன.
உள்நாட்டைப்பொருத்தவரை மெட்ரோ நகரங்களோடு கோவா, ஜெய்பூர், புனே, கொச்சின் ஆகிய நகரங்கள் அதிகம் நாடப்படுகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|