‘நோட் புக்’ விலை  10 சதவீதம் அதிகரிப்பு‘நோட் புக்’ விலை 10 சதவீதம் அதிகரிப்பு ... மாநிலத்துக்குள், ‘இ – வே பில்’ மோசடி நடைபெற வாய்ப்பு மாநிலத்துக்குள், ‘இ – வே பில்’ மோசடி நடைபெற வாய்ப்பு ...
மாம்பழம் பழுக்க வைக்க ரசாயன, ‘ஸ்ப்ரே’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2018
00:40

திருப்பூர்:மாங்­காய் பழுக்க வைக்க, ரசா­யன, ‘ஸ்ப்ரே’ அடிப்­ப­வர்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென, உணவு பாது­காப்­புத்­ துறை எச்­ச­ரித்­துள்­ளது.
நாடு முழு­வ­தும், மாம்­பழ சீசன் துவங்­கி­யுள்­ளது. மாங்­காய்­களை கொள்­மு­தல் செய்­யும் வியா­பா­ரி­கள், ரசா­யன, ‘கார்­பைட்’ கற்­களை பயன்­ப­டுத்தி, ஒரே நாளில் பழுக்க வைக்­கின்­ற­னர்.இத்­த­கைய மாம்­ப­ழங்­களை சாப்­பி­டு­வோ­ருக்கு, கடு­மை­யான உடல் உபா­தை­கள் ஏற்­படும். இப்­படி செயற்­கை­யாக பழுத்த மாம்­ப­ழங்­களை, அதி­கா­ரி­கள் எளி­தில் கண்­டு­பி­டிப்­ப­தால், வேறு வழி­மு­றை­களை வியா­பா­ரி­கள் கையாள்­கின்­ற­னர்.
இது குறித்து உணவு பாது­காப்­புத்­ துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:‘கார்­பைட்’ கற்­களை பயன்­ப­டுத்தி, மாங்­காயை பழுக்க வைத்­தால் எளி­தாக கண்­ட­றி­ய­லாம். வழக்­க­மான, மாம்­பழ வாசனை இருக்­காது. குறை­வாக இருக்­கும்.இயற்­கை­யாக பழுப்­பது போல், சீராக பழுக்­காது. பழத்­தின் ஒரு பகுதி கனிந்­தும், மற்­றொரு பகுதி காயா­க­வும் இருக்­கும்.
இதை கண்­டு­பி­டித்து விடு­வ­தால், வியா­பா­ரி­கள் வேறு வழி­மு­றையை கையாளு­கின்­ற­னர். மாங்­காய்­களை பார்­சல் செய்­யும் போதே, ‘எத்­தி­பான்’ என்­னும் ரசா­யன ‘ஸ்ப்ரே’ அடித்து விடு­கின்­ற­னர். இத்­த­கைய மாம்­ப­ழங்­க­ளி­லும், மணம் குறை­வாக இருக்­கும்.வெளிர் ரோஸ் நிறத்­தில், லேசான பட­லம் படர்ந்­தது போல் இருக்­கும். எனவே, மாம்­ப­ழம் வாங்­கு­வோர் கவ­னத்­து­டன் இருக்க வேண்­டும்.
இயற்­கைக்கு மாறான விதத்­தில், பழுத்த பழங்­களை உண்­டால், உடல் நலத்­துக்கு கேடு ஏற்­படும். தவ­றான வழி­மு­றை­யில் பழத்தை பழுக்க வைத்து விற்­பனை செய்­யும் வியா­பா­ரி­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.இவ்­வாறு, அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.144 சரிந்த நிலையில் இன்று(மே 22) அதேஅளவு உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - ... மேலும்
business news
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத முக்கிய நிகழ்வு திருமணம். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், ... மேலும்
business news
புதுடில்லி : ‘எரி­பொ­ரு­ளுக்­கான கலால் வரியை குறைத்­தால், பெட்­ரோல், டீசல் ஆகி­ய­வற்­றின் விலை, கட்­டுக்­குள் ... மேலும்
business news
புதுடில்லி : கிங்­பி­ஷர் உள்­ளிட்ட, 18 நிறு­வ­னங்­கள், பங்­குச்சந்தை பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட உள்­ள­தாக, ... மேலும்
business news
மும்பை : கடன் பெறு­வ­தற்கு தகு­தி­யான, நம்­ப­க­மான வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கடன் தரு­வ­தில், வங்­கி­களும், நிதி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Roopa Malikasd - Trichy,India
16-மே-201806:42:27 IST Report Abuse
Roopa Malikasd இப்படி உயிரோட கோலா பண்ணற வியாபாரிகளுக்கு மனசாட்சி இல்லையா...அப்படி என்ன மற்றவர்களை இம்சித்து பணம் சம்பாதிப்பது..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)