பதிவு செய்த நாள்
17 மே2018
01:30
சென்னை : சென்னையைச் சேர்ந்த, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம், 2017 -– 18ம் நிதியாண்டின், ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 31 சதவீதம் உயர்ந்து, 165.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, 2016 -– 17ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 126.77 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், நிறுவனத்தின் வருவாய், 3,076 கோடியில் இருந்து, 3,993 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 32 சதவீதம் அதிகரித்து, 8.89 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை, 29 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7.28 லட்சமாக உயர்ந்துள்ளது.
‘‘மூலப்பொருட்கள் விலையேற்றம்; தமிழகம் மற்றும் கர்நாடகாவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு போன்றவற்றால், வாகனங்கள் விலை, 1.4 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. ‘‘மதிப்பீட்டு காலாண்டில், மூன்று புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்,’’ என, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான, கே.என்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|