டிஜிட்டல் கடன் வசதி அறி­முகம்டிஜிட்டல் கடன் வசதி அறி­முகம் ... கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் ரூ.50 கோடி கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் ரூ.50 கோடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நல்ல கிரெடிட் ஸ்கோரால் உங்­க­ளுக்கு கிடைக்கும் பலன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2018
00:17

கடன் தகு­தியை தீர்­மா­னிப்­பதில், ஓர் அம்­ச­மாக விளங்கும், கிரெடிட் ஸ்கோரின் முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்து வரு­வதால், இது குறித்த விழிப்­பு­ணர்வு அவ­சியம்.

உங்கள் கிரெடிட் ஸ்கோரில் கவ­ன­மாக இருக்க வேண்டும் என அடிக்­கடி சொல்­லப்­ப­டு­வதை நீங்கள் கேள்­விப்­பட்டு இருக்­கலாம். கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் எந்த விஷ­யத்­தையும் செய்­யக்­ கூ­டாது என்றும் நிதி வல்­லு­னர்கள் வலி­யு­றுத்தி வரு­வ­தையும் நீங்கள் அறிந்­தி­ருக்­கலாம்.

வங்­கி­களில் கடன் பெறு­வதில் கிரெடிட் ஸ்கோரும் முக்­கிய அம்­ச­மாக இருப்­பதே இதற்கு காரணம். குறை­வான கிரெடிட் ஸ்கோர் பெற்­றி­ருப்­ப­வர்­க­ளுக்கு, வங்­கிகள் கடன் கொடுப்­பதில் தயக்கம் காட்­டு­வ­தாக கூறப்­ப­டு­வதில் இருந்தே, இதன் முக்­கி­யத்­து­வத்தை தெரிந்து கொள்­ளலாம்.

கடன் தகுதி:
கிரெடிட் ஸ்கோர், கடன் பெறும் வாய்ப்பை பாதிக்கும் என்­பது மட்டும் அல்ல, சிறந்த கிரெடிட் ஸ்கோரை பெற்­றி­ருந்தால் கடன் சலு­கை­யையும் பெறலாம் எனும் நிலை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. ஒரு சில வங்­கிகள், நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, வட்டி விகி­தத்தில் சலுகை அளிக்க முன்­வந்­துள்­ளன. ‘கிரெடிட் இன்­பர்­மேஷன் பியூரோ’ எனப்­படும் கடன் சேவை அமைப்­புகள், கிரெடிட் ஸ்கோரை வழங்கி வரு­கின்­றன. ‘டிரான்ஸ்­ யூ­னியன் சிபில்’ உள்­ளிட்ட அமைப்­புகள் இதை வழங்கி வரு­கின்­றன.

ஒரு­வரின் கடன் பெறும் தகு­தியை குறிக்கும் மதிப்­பெண்­ணாக கிரெடிட் ஸ்கோர் அமை­கி­றது. கடன் பெறு­ப­வர்கள் அதற்­கான தவணைத் தொகையை முறை­யாக திரும்பச் செலுத்­து­வதன் அடிப்­படையில் இந்த மதிப்பெண் கணக்­கி­டப்­ப­டு­கி­றது. கடன் தவணை மட்டும் அல்­லாது, கிரெடிட் கார்டு தொகையை செலுத்­து­வது, மற்ற கட்­ட­ணங்­களை முறைப்­படி செலுத்­து­வது உள்­ளிட்ட அம்­சங்­களும் கணக்கில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு, கிரெடிட் மதிப்பெண் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.

மூன்று இலக்க எண்­ணாக இது அமை­கி­றது. பொது­வாக, 300 முதல், 900 வரை இது அமை­கி­றது. 700 எனும் அளவில் இருப்­பது நல்ல கிரெடிட் ஸ்கோராக கரு­தப்­ப­டு­கி­றது. அதற்கு மேல் இருந்தால் இன்னும் நல்­லது. கடன் தகு­தியை தீர்­மா­னிப்­பதில் கிரெடிட் ஸ்கோரை முக்­கி­ய­மாக கருதி வந்த வங்­கிகள் தற்­போது, இதற்­காக வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பரி­ச­ளிக்­கவும் முன்­வந்­துள்­ளன. அதா­வது, முறை­யாக கடன் தவணையை செலுத்தி வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கடன் வழங்­கு­வதில் முன்­னு­ரிமை அளிப்­ப­தோடு, வட்டி விகி­தத்­திலும் சலுகை அளிக்க பொதுத் துறை வங்­கிகள் தீர்­மா­னித்­துள்­ளன.

வட்டி விகித சலுகை:
பரோடா வங்கி, பாங்க் ஆப் இந்­தியா ஆகிய வங்­கிகள், சிபில் ஸ்கோர் அதிகம் உள்ள வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வட்டி விகி­தத்தில், 10 அடிப்­படை புள்­ளிகள் சலுகை அளிக்­கின்­றன. ஐ.டி.பி.ஐ., வங்­கியும் அண்­மையில் இது தொடர்­பான அறி­விப்பை வெளி­யிட்­டது. முறை­யாக கடன் தவ­ணை­களை செலுத்தி வரும் வாடிக்­கை­யா­ளர்­களுக்கு, அதற்­கான பலனை அளிப்­பது சரி­யாக இருக்கும் என்­பதன் அடிப்­ப­டையில் இது அமை­கி­றது. எனவே, நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்­கை­யா­ளர்கள் எளி­தாக கடன் பெறலாம் என்­ப­தோடு, வட்டி விகித சலு­கை­யையும் பெறலாம்.

அதே நேரத்தில், குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்­ள­வர்­க­ளுக்­கான வட்டி விகிதம் அதி­க­மாக இருக்கும். சிபில் உள்­ளிட்ட அமைப்­புகள், வங்­கிகள் மட்டும் அல்­லாமல் நிதி நிறு­வ­னங்­க­ளிடம் இருந்தும், கடன் தகுதி விப­ரங்­களை பெறத் துவங்­கி­உள்­ளன. இதனால், கிரெடிட் ஸ்கோர் மேலும் பர­வ­லாகும் வாய்ப்பு உள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)