பதிவு செய்த நாள்
27 மே2018
00:25
புதுடில்லி: மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்வோருக்கு, 7 வகையான வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களை, மத்திய நேரடி வரிகள் வாரியம், நேற்று வெளியிட்டது.இந்த, 2018 -– 19 வரி மதிப்பீட்டு ஆண்டிற்கான இப்படிவங்களின் கீழ், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, ஜூலை 31 கடைசி நாள் ஆகும்.ஒரு சில பிரிவினர் தவிர, மற்றவர்கள் https://www.incometaxindiaefiling.gov.in வலைதளத்தில் தங்களுக்கு உரிய படிவத்தின் கீழ், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது. ‘சாஹஜ்’ எனப்படும், ‘ஐ.டி.ஆர்., – 1’ படிவத்தில், 50 லட்சம் ரூபாய் வரை, ஊதியம் பெறுவோர் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில், 3 கோடி பேர் இந்த படிவத்தில் விண்ணப்பித்திருந்தனர். தனி நபர்கள், ஹிந்து கூட்டு குடும்பத்தினர், ‘ஐ.டி.ஆர்., – 2’ படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.ஒரு தொழில் அல்லது நிறுவனத்தில் வருவாய் பெறும் தனிநபர் மற்றும் ஹிந்து கூட்டு குடும்பத்தினர், ‘ஐ.டி.ஆர்., – 3’யும், அனுமான வருவாய் குறித்து, ‘ஐ.டி.ஆர்., – 4’ படிவத்தையும் பயன்படுத்தலாம்.ஐந்து லட்சம் ரூபாய்க்கு மிகாத வருவாய் உள்ள, 80 வயதுக்கு மேற்பட்ட தனி நபர்கள் அல்லது ஹிந்து கூட்டு குடும்பத்தனர், ‘ஐ.டி.ஆர்., – 1’ அல்லது ‘ஐ.டி.ஆர்., – 4’ ஆவண படிவங்களில் கணக்கு தாக்கல் செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|