ஆந்திராவுக்கு நகரும் நிறுவனங்கள்ஆந்திராவுக்கு நகரும் நிறுவனங்கள் ... தங்கம் விலை ரூ.224 சரிவு தங்கம் விலை ரூ.224 சரிவு ...
எரிவாயு சந்தை விரைவில் செயல்பட துவங்கும்; பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2018
00:38

ஐதராபாத் : இந்­தி­யா­வில், முதன் முறை­யாக அமைய உள்ள, எரி­வாயு சந்­தைக்­கான முதற்­கட்ட பணி­கள் துவங்­கி­யுள்ளன.

பங்­குச் சந்தை, விளை­பொ­ருள் முன்­பேர சந்தை ஆகி­ய­வற்றை போல, இந்­தி­யா­விற்­கென, எரி­வாயு சந்­தையை அமைக்க, மத்­திய அரசு முடிவு செய்­து உள்­ளது. இச்­சந்­தை­யில், எரி­வாயு மீதான வர்த்­த­கம் நடை­பெ­றும். இது, எரி­வாயு மீதான அன்­றாட விலை நிர்­ண­யத்­திற்கு உத­வும்.

தற்­போது, அமெ­ரிக்கா, கனடா, பிரிட்­டன், ரஷ்யா ஆகிய நாடு­களில் நில­வும் எரி­வாயு விலை அடிப்­ப­டை­யில், உள்­நாட்­டில் இயற்கை எரி­வாயு விலை, ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு முறை, மத்­திய அர­சால் நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது. அந்த நாடு­களில், 10 லட்­சம் யூனிட் இயற்கை எரி­வா­யு­விற்கு, 3.06 டாலர் என்ற அடிப்­ப­டை­யில், உள்­நாட்­டில், எரி­வாயு விலை, கடந்த ஏப்­ர­லில் நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

உள்நாட்டில்:
இதே அள­வில், இறக்­கு­ம­தி­யா­கும், திரவ இயற்கை எரி­வா­யு­வின் விலை, 7.50 டால­ராக உள்­ளது.உள்­நாட்­டில், எரி­வாயு சந்தை அமைந்­தால், சந்தை விலைக்­கேற்ப, இயற்கை எரி­வாயு விலையை நிர்­ண­யம் செய்­ய­லாம். எரி­வாயு பயன்­பா­டும் அதி­க­ரிக்­கும்.

இது குறித்து, பெட்­ரோ­லி­யம் மற்­றும் இயற்கை எரி­வாயு ஒழுங்­கு­முறை ஆணைய உறுப்­பி­னர், சத்­பல் கர்க் கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில் எரி­வாயு சந்தை அமைப்­ப­தற்­கான விதி­மு­றை­களை உரு­வாக்­கு­வது குறித்து ஆலோ­சனை வழங்க, சர்­வ­தேச தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘கிரி­சில்’ நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த, 15 வாரங்­களில், விதி­மு­றை­கள் உரு­வாக்­கப்­பட்டு, அக்­டோ­ ப­ரில் சந்­தையை செயல்­பாட்­டிற்கு கொண்டு வர திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. மின்­சார சந்­தையை போல, எரி­வா­யு­வின் தேவை, சப்ளை ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில், எரி­வாயு சந்­தை­யில் விலை நிர்­ண­யம் செய்­யப்­படும். இங்கு, மின்­னணு தொழில்­நுட்­பத்­தில் வர்த்­த­கம் நடை­பெ­றும். முக்­கிய எண்­ணெய் குழாய்­கள் எங்கு அமைந்­துள்­ள­னவோ, அங்கு, எரி­வா­யுவை வினி­யோ­கிக்க வச­தி­யாக, சந்தை அமைக்­கப்­படும்.

இலக்கு:
தற்­போது, குஜ­ராத், மஹா­ராஷ்­டிரா, ஆந்­தி­ரா­வின் காக்­கி­நாடா ஆகி­ய­வற்­றில், முக்­கிய எரி­வாயு குழாய்­கள் உள்ளன. இவற்­றில், ஏதா­வது ஓரி­டத்­தில், எரி­வாயு சந்தை அமைய வாய்ப்­புள்­ளது.மத்­திய அரசு, எரி­சக்தி துறை­யில், இயற்கை எரி­வா­யு­வின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளது. எரி­வாயு சார்ந்த பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான திட்­டங்­களை தீட்டி வரு­கிறது.

எரி­சக்தி துறை­யில், எரி­வா­யு­வின் பங்கை, தற்­போ­தைய, 6 சத­வீ­தத்­தில் இருந்து, 2030ல், 15 சத­வீ­த­மாக உயர்த்த, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஹென்றி எரிவாயு சந்தை:
அமெ­ரிக்­கா­வின், லுாசியானா மாகா­ணத்­தில் உள்ள, ஹென்றி மையம் ­தான், உல­கின் மிகப் பெரிய இயற்கை எரி­வாயு சந்­தை­யாக விளங்­கு­கிறது. இங்­கி­ருந்து, மெக்­சிகோ, கனடா ஆகிய நாடு­க­ளுக்கு, குழாய்­கள் மூலம் இயற்கை எரி­வாயு சப்ளை ஆகிறது. என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., எனப்­படும், நியூ­யார்க் வணிக சந்­தை­யில் நடை­பெ­றும் முன்­பேர வர்த்­த­கத்­தின் அடிப்­ப­டை­யில், ஹென்றி மையத்­தில் இருந்து எரி­வாயு சப்ளை செய்­யப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)