ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ ரூ.7,000 கோடி ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டது ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ ரூ.7,000 கோடி ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டது ... வணிக வளாகங்கள் துறையில் வளர்ச்சி வணிக வளாகங்கள் துறையில் வளர்ச்சி ...
நிறுவனங்களை கை கழுவும், ‘ஆடிட்டர்’கள் சட்ட நடவடிக்கை பாயும் என அச்சம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2018
01:08

புதுடில்லி:சட்ட நட­வ­டிக்­கைக்கு அஞ்சி, வெளிப்­ப­டை­யாக தக­வல்­களை தராத நிறு­வ­னங்­களில் இருந்து, அவற்­றின், ‘ஆடிட்­டர்’கள் வெளி­யே­று­வது தொடர்­க­தை­யாகி வரு­கிறது.

ஆண்டு நிதி­நிலை அறிக்­கையை மிகைப்­ப­டுத்தி காட்டி, பல்­வேறு முறை­கே­டு­களில் ஈடு­படும் நிறு­வ­னங்­களை கட்­டுப்­ப­டுத்த, புதிய நிறு­வ­னங்­கள் சட்ட திருத்­தம் வகை செய்­கிறது.ஒரு நிறு­வ­னம், நிதி­நிலை அறிக்­கை­யில் முறை­கேடு செய்­தது தெரி­ய­வந்­தால், அதன் கணக்கை தணிக்கை செய்­யும் ஆடிட்­ட­ரை­யும் பொறுப்­பாளி ஆக்­கு­கிறது இந்த சட்­டம்.

நிறு­வ­னத்­தின் அனைத்து செயல்­பா­டு­க­ளுக்­கும், அதன் இயக்­கு­னர் குழு மட்­டு­மின்றி, கணக்­கு­களை தணிக்கை செய்­யும் நிறு­வ­ன­மும் முழு பொறுப்பை ஏற்க வேண்­டும் என, இந்த சட்­டம் கூறு­கிறது.நிறு­வ­னத்­தின் உண்மை நில­வ­ரங்­களை வேண்­டு­மென்றே மறைத்து, கடன்­தா­ரர்­கள், பங்கு முத­லீட்­டா­ளர்­கள், வரித் துறை அதி­கா­ரி­களை ஏமாற்­றி­ய­தாக, இச்­சட்­டத்­தின் கீழ், ஆடிட்­டர்­க­ளுக்கு, அப­ரா­த­மு­டன், 10 ஆண்­டு­கள் சிறை தண்­டனை விதிக்க முடி­யும்.

இதன் கார­ண­மாக, ஆடிட்­டர்­கள், நிறு­வ­னங்­க­ளி­டம் வெளிப்­ப­டை­யான தக­வல்­களை எதிர்­பார்க்­கத் துவங்­கி­யுள்­ள­னர்.அவ்­வாறு இல்­லா­மல், கணக்கு தணிக்­கைக்கு போது­மான தக­வல்­களை தர மறுக்­கிற நிறு­வ­னங்­களில் இருந்து, பின்­னா­ளில் சட்ட நட­வ­டிக்­கைக்கு ஆளாக நேரும் என்ற அச்­சத்­தில், ஆடிட்­டர்­கள் வெளி­யே­று­கின்­ற­னர்.

சமீ­பத்­தில், ‘மன்­ப­சந்த் பிவ­ரே­ஜஸ், வக்­ரங்கி, ஜெட் ஏர்­வேஸ், எல் அண்டு டி’ நிறு­வ­னத்­தின் கப்­பல் பிரிவு, ‘அட்­லாண்டா’ உள்­ளிட்ட பல நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் வெளி­யே­றி­யுள்­ள­னர்.‘வக்­ரங்கி நிறு­வ­னம், இயக்­கு­னர் தேர்வு நடை­மு­றை­கள் தொடர்­பானஆவ­ணங்­கள், தங்­கம் மற்றும் ஆப­ரண வர்த்­தக விப­ரங்­கள் ஆகி­யவை குறித்து, போது­மான தக­வல்­களை தெரி­விக்­க­வில்லை’ என, தெரி­வித்து, அதன் கணக்கு தணிக்­கை­யில் இருந்து, ‘பிரைஸ் வாட்­டர்கூப்­பர்ஸ்’ நிறு­வ­னம்வில­கி­யுள்­ளது.

இதே தணிக்கை நிறு­வ­னம், தனி இயக்­கு­ன­ரின் ராஜி­னாமா மற்­றும் வரு­மான வரித் துறை விசா­ரணை விப­ரங்­களை தெரி­விக்­க­வில்லை என்­ப­தால், அட்­லாண்டா நிறு­வ­னத்­தில் இருந்­தும் வெளி­யே­றி ­யுள்­ளது.‘மன்­ப­சந்த் பிவ­ரே­ஜஸ் நிறு­வ­னம் போது­மான தக­வல்­களை தர­வில்லை’ என, கணக்கு தணிக்கை ஒப்­பந்­தத்தை. ‘டிலோட்டி ஹஸ்­கின்ஸ் அண்டு செல்ஸ்’ நிறு­வ­னம் முறித்­துக் கொண்­டது.

நேற்று முன்­தி­னம், ‘ஐநாக்ஸ் விண்டு’ நிறு­வ­னத்­தின் கணக்கு தணிக்­கை­யில் இருந்து வில­கு­வ­தாக, ‘பதன்­கர் அண்டு அசோ­சி­யேட்ஸ்’ தெரி­வித்­துள்­ளது.ஆடிட்­டர்­க­ளி­டம் ஏற்­பட்­டுள்ள மாற்­றம், நிறு­வ­னங்­க­ளி­டம் அதிக வெளிப்­ப­டைத் தன்­மையை ஏற்­ப­டுத்தி, ஒழுங்­கு­மு­றையை கொண்டு வரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சத்யம் முதல் கீதாஞ்சலி வரை...

ராம­லிங்க ராஜு­வின், ‘சத்­யம் கம்ப்­யூட்­டர்ஸ்’ முதல், சமீ­பத்­திய மெகுல் சோக்­ஸி­யின், ‘கீதாஞ்­சலி ஜெம்ஸ்’ வரை­யி­லான அனைத்து மோச­டி­களும், அவற்­றின் மிகைப்­ப­டுத்­தப்­பட்ட நிதி­நிலை அறிக்­கை­கள் அடிப்­ப­டை­யி­லேயே நடந்­துள்­ளன.சத்­யம் கம்ப்­யூட்­டர்ஸ் முறை­கேடு தொடர்­பாக, அதன் கணக்கை தணிக்கை செய்த, பிரைஸ் வாட்டர் கூப்­பர்ஸ் நிறு­வ­னத்­திற்கு, ‘செபி’ இரண்டாண்­டு­கள் தடை விதித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)