பி.எப்., புதிய விதிகளின்  தாக்கம் என்ன?பி.எப்., புதிய விதிகளின் தாக்கம் என்ன? ... ஜி.எஸ்.டி., 2.0: சில எதிர்­பார்ப்­பு­கள் ஜி.எஸ்.டி., 2.0: சில எதிர்­பார்ப்­பு­கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரித்­தாக்­கல்: நினை­வில் கொள்ள வேண்­டிய வட்டி வரு­மா­னங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2018
00:51

வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­யும் போது, வட்டி வரு­மா­னத்­தை­யும் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­பது பெரும்­பா­லா­னோர் அறிந்­தது தான். வைப்பு நிதி மீதான வரு­மா­னம் போன்­றவை பல­ருக்கு நினை­வில் இருந்­தா­லும், வேறு சில வரு­மா­னத்தை மறந்­து­வி­டும் வாய்ப்பு இருக்­கிறது. அந்த வகை­யில், வரித்­தாக்­கல் செய்­யும் போது, மறக்­கா­மல் கவ­னத்­தில் கொள்ள வேண்­டிய வட்டி வரு­மா­னங்­கள் இவை:
லாக்­கர் வைப்பு நிதி
வங்­கி­களில் லாக்­கர் சேவை பெறும் போது அதற்கு இணை­யாக வைப்பு நிதி முத­லீடு செய்ய வேண்­டி­யி­ருக்­க­லாம். இந்த வைப்பு நிதி மீதான வட்டி வரு­மா­னத்தை லாக்­கர் வாட­கைக்கு பயன்­ப­டுத்­த­லாம் அல்­லது வைப்பு நிதி­யில் சேர அனு­ம­திக்­க­லாம். ஆனால், இதன் மீது, டி.டீ.எஸ்., பிடிக்­கப்­ப­டாத நிலை­யில், இந்த வரு­மா­னத்­தை­யும் கணக்­கில் சேர்க்க வேண்­டும்.
பத்­திர வரு­மா­னம்
பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், தனி­யார் நிறு­வ­னங்­கள், நிதி அமைப்­பு­கள் அவ்­வப்­போது பத்­தி­ரங்­களை வெளி­யி­டு­கின்­றன. இவற்­றுக்கு விண்­ணப்­பிக்­கும் போது, அதிக அள­வில் விண்­ணப்­பங்­கள் குவி­யும் நிலை­யில், பகுதி அளவு பத்­தி­ரங்­கள் ஒதுக்­கப்­பட்டு, எஞ்­சிய தொகை திருப்பி அளிக்­கப்­படும். இதற்கான வட்டி வரு­மா­னத்­தை­யும் மன­தில் கொள்ளவும்.
செக்­யூ­ரிட்டி டெபா­சிட்
மின் சேவை மற்­றும் தொலைத்­தொ­டர்பு சேவை பெறும் போது, இணைப்­பிற்­காக ஒரு­முறை செக்­யூ­ரிட்டி டெபா­சிட் செலுத்த வேண்­டும். இணைப்பு விலக்கி கொள்­ளும் வரை இது அம­லில் இருக்­கும். இந்த தொகைக்கு, வட்டி வரு­மா­ன­மும் அளிக்­கப்­ப­டு­வ­துண்டு எனில், இந்த தொகை­யை­யும் சேர்த்­துக்­கொள்ள வேண்­டும்.
என்.எஸ்.சி., முத­லீடு
தேசிய சேமிப்பு சான்­றி­த­ழான, என்.எஸ்.சி., முத­லீடு மீதான வட்டி வரு­மா­னம் வரி விலக்­கிற்கு உட்­பட்­டது, எனி­னும் இது இந்த தொகை மறு­மு­த­லீடு செய்­யப்­படும் காலத்­திற்கு மட்­டுமே பொருந்­தும். முதிர்­வின் போது மொத்­த­மாக விலக்கி கொள்­ளும் போது, மறு முத­லீடு செய்­யப்­ப­டு­வதில்லை என்­ப­தால், கணக்­கில் சேர்­க்கப்­பட வேண்­டும்.
வரி ரீபண்ட்
இதே போல, பி.பி.எப்., முத­லீடு வரி விலக்­கிற்கு உட்­பட்டது என்­றா­லும், அதன் வட்டி வரு­மா­னத்தை கணக்­கில் காட்டி, விலக்கு பெறப்­பட்­டது என்­பதை குறிப்­பிட வேண்டும். வரு­மான வரி தாக்­கல் செய்த பின், தொகை திரும்பி செலுத்­தப்­பட்டு, அதற்கு வட்டி அளிக்­கப்­பட்­டி­ருந்­தால் அதை­யும் மறக்கக் கூடாது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)