வர்த்­தக போரும் நம் முத­லீ­டு­களும்வர்த்­தக போரும் நம் முத­லீ­டு­களும் ... ‘சைரஸ் மிஸ்திரி நீக்கம் சரியே!’ ‘சைரஸ் மிஸ்திரி நீக்கம் சரியே!’ ...
விவ­சா­யி­களின் வயிறு வாழ்த்­தும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2018
00:36

சம்பா பரு­வத்­தில் பயி­ரி­டப்­படும், 14 வித­மான பயிர்­க­ளுக்கு, இந்த ஆண்டு, மத்­திய அர­சாங்­கம் வழங்­க­வி­ருக்­கும் குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை­கள் அறி­விக்­கப்­பட்­டுள்ளன. இதற்கு வர­வேற்­பும் விமர்­ச­னங்­களும் எழுந்­துள்ளன. இதை எப்­ப­டிப் புரிந்­து­கொள்­வது?

இந்­தி­யா­வில் விவ­சாய உற்­பத்தி தொடர்ச்­சி­யாக சரிந்­து­வ­ரு­வது கண்­கூடு. பல்­வேறு இயற்கை மற்­றும் செயற்கை கார­ணங்­க­ளால், விவ­சா­யத்­தைத் தொட­ர­மு­டி­யாத சூழல். பல மாநி­லங்­களில் விவ­சா­யக் கடன்­க­ளைத் தள்­ளு­படி செய்­ய­வேண்­டும் என்ற கோரிக்கை எழுந்­துள்­ளது.
சமீ­பத்­தில் கர்­நா­டக அர­சாங்­கத்­தின் நிதி நிலை அறிக்­கை­யில், 34 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு விவ­சா­யக் கடன் தள்­ளு­படி செய்­யப்­படும் என்ற அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது கவ­னத்­துக்­கு­ரி­யது.இந்­நி­லை­யில், நெல், சோளம், கம்பு, கேழ்­வ­ரகு, மக்­கா­சோ­ளம், துவ­ரம்­ப­ருப்பு, பாசி­ப­ருப்பு, உளுந்­தம்­ப­ருப்பு, நிலக்­க­டலை, சூரி­ய­காந்தி விதை, சோயா­பீன்ஸ், பருத்தி நடுத்­த­ர­வகை, எள், கருஞ்­சீ­ர­கம் ஆகிய 14 விளை­பொ­ருட்­க­ளுக்கு கடந்த ஆண்டு வழங்­கப்­பட்­ட­தை­விட சரா­ச­ரி­யாக 14.5 சத­வீ­தம் விலை உயர்த்தி வழங்­கப்­பட்­டுள்­ளது.
மத்­திய அர­சாங்­கம் இதை ஒரு முக்­கிய முன்­னேற்­ற­மாக கரு­து­கிறது. எம்.எஸ். சுவா­மி­நா­தன் குழு அளித்த பரிந்­து­ரையை ஒட்­டியே இத்­த­கைய ஆதார விலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­பது ஒரு வாதம். ஆனால், அந்த பரிந்­துரை முழு­மை­யா­கப் பின்­பற்­றப்­ப­ட­வில்லை என்­பது மற்­றொரு வாதம்.
அர­சி­யல் ரீதி­யான விமர்­ச­னங்­களை ஒதுக்­கி­வைத்­து­விட்­டுப் பார்த்­தா­லும், கடந்த ஆண்­டை­விட, ஆதார விலை உயர்த்­தியே வழங்­கப்­பட்­டுள்­ளது உண்மை. இத­னால், விவ­சா­யி­கள் பயன் அடை­வார்­களா என்ற கேள்­வி­தான் முக்­கி­ய­மா­னது.அர­சாங்­கம் ஆத­ரவு விலை தரும் பயிர்­க­ளையே விவ­சா­யி­கள் சம்பா பரு­வத்­தில் பயி­ரி­டு­வார்­கள் என்­பற்கு நிச்­ச­ய­மில்லை. நிலம், மழை­ய­ளவு, இதர ஆதா­ரங்­களை ஒட்­டியே அவர்­க­ளு­டைய பயிர்­கள் இருக்­கப் போகின்றன.
மேலும், ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய நிலத்­தி­லும் வேறு வேறு பயிர்­கள் ஏற்­கெ­னவே பயி­ரி­டப்­பட்டு இருக்­க­லாம். நிலத்தை மறு­வூட்­டம் செய்­ய­வேண்­டி­ய­தன் அடிப்­ப­டை­யில், பயிர்­களை மாற்றி விதைக்­க­வேண்­டிய தேவை உள்­ளது. இந்­நி­லை­யில், அர­சாங்­கத்­தின் ஆத­ரவு விலையை எதிர்­பார்த்து, பயிர் செய்­யும் போக்கு பெரும்­பா­லும் நடை­பெற வாய்ப்­பில்லை.
எவ்­வ­ளவு விளை­பொ­ருட்­களை அர­சாங்­கத்­தால் கொள்­மு­தல் செய்­ய­மு­டி­யும் என்­பது அடுத்த விடை தெரி­யாத கேள்வி. அத்­தனை சிறு­ந­க­ரங்­க­ளி­லும் கொள்­மு­தல் செய்­வ­தற்­கான வசதி இருக்­கி­றதா என்­பது தெரி­ய­வில்லை. ஆனால், அர­சாங்­கம் அமைத்த குழு ஒன்று தெரி­விக்­கும் செய்தி இங்கே கவ­னிக்­கத்­தக்­கது.
அதா­வது, இந்­தி­யா­வில் உள்ள மொத்த விவ­சா­யி­களில் 6 சத­வீ­தத்­தி­னரே, குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை­யில் விளை­பொ­ருட்­களை விற்­பனை செய்­கின்­ற­னர் என்­கிறது அந்த அறிக்கை. அதா­வது மீத­முள்ள 94 சத­வீத விவ­சா­யி­கள் வெளிச்­சந்­தை­யில் தான் விற்­பனை செய்­கின்­ற­னர். அங்கே குறைந்­த­பட்ச ஆதார விலை வழங்­கப்­ப­டுமா என்­பது நிச்­ச­ய­மில்லை.
பதி­னான்கு விளை­பொ­ருட்­க­ளுக்கு விலை அறி­விக்­கப்­பட்டு இருந்­தா­லும், இவற்­றில் முக்­கி­ய­மா­னவை நெல்­லும் சோள­மும்­தான். சோளத்­தோடு ஒப்­பி­டும்­போது, நெல்­லுக்கு பெரிய அள­வில் விலை­யு­யர்வு கொடுக்­கப்­ப­ட­வில்லை. அதி­கம் பயி­ரா­கும் நெல்­லுக்கு உரிய விலை கிடைக்­க­வில்லை எனில், அத­னால் பாதிப்பு விவ­சா­யி­க­ளுக்­குத்­தான்.
இன்­னொரு பிரச்னை, விளை­பொ­ருட்­க­ளைச் சேமித்­து­வைக்­கும் இந்­திய உண­வுக் கழ­கத்­தின் கிடங்­கு­களின் போதாமை. பல கிடங்­கு­கள் விவ­சா­யி­க­ளுக்கு அருகே இல்லை. அங்கே எடுத்­துக்­கொண்­டு­போய் கொடுத்­தா­லும், உண­வுக் கழ­கத்­தால் சேமித்து வைக்க முடி­யுமா என்ற சந்­தே­க­மும் எழுப்­பப்­ப­டு­கிறது.
இதை­யெல்­லாம் இந்­திய அர­சாங்­கம் போர்க்­கால அடிப்­ப­டை­யில் சரி­செய்ய முயற்சி செய்­ய­லாம். ஏற்­கெ­னவே விவ­சா­யி­கள் மனம் நொந்து போயி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்­துக்­குத் தேவை­யா­ன­வற்­றைச் செய்­யா­மல் போனால், அது வரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம் என்ற அக்­கறை மத்­திய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நிச்­ச­யம் இருக்­கும்.
ஆனால், விவ­சா­யம் செழிக்க, விவ­சா­யி­கள் முன்­னேற்­றம் அடைய, குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை மட்­டும் போதுமா? போதாது.தொழி­ல­கங்­கள், சேவை­கள் என்று நமது கொள்­கை­களும் முடி­வு­களும் முற்­றி­லும் வேறொரு திசை நோக்கி நகர்ந்த பிறகு, விவ­சா­யத்­துக்­கும் விளை­பொ­ருட்­க­ளுக்­கும் உரிய கெள­ர­வம் கிடைக்­க­வில்லை.அத­னால் தான் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், விவ­சா­யத்­தின் பங்­க­ளிப்பு தொடர்ச்­சி­யாக சரிந்து வரு­கிறது.
இந்­நி­லை­யில், அர­சாங்­கம் இன்­னும் விரி­வான ஏற்­பா­டு­க­ளோடு விவ­சா­யத்தை அணுக வேண்­டும். என்ன உற்­பத்தி செய்­ய­லாம் என்­ப­தற்­கான விரி­வான ஆலோ­ச­னை­கள் தொடர்ச்­சி­யாக வழங்­கப்­பட வேண்­டும். அதற்­குத் தேவை­யான இடு­பொ­ருட்­களும் விதை­களும், விஞ்­ஞான அணு­கு­மு­றை­யும் சொல்­லித்­த­ரப்­பட வேண்­டும்.
விவ­சா­யத்­தில் ஏற்­பட்­டுள்ள அறி­வி­யல் முன்­னேற்­றங்­கள் உல­கெங்­கும் கோலோச்­சு­கின்றன. அதனை எல்­லாம் இங்கே கொண்­டு­வர வேண்­டும். பயிர் மேலாண்மை, நீர்ப்­பா­ச­னம் என்று ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் விவ­சா­யி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­க­வேண்­டும். அவர்­க­ளுக்­குத் தேவைப்­படும் விவ­சா­யக் கடன்­களை வழங்­கு­வ­தற்­கான எளி­மை­யான வழி­முறை உரு­வாக்­கப்­பட வேண்­டும்.
இடைத்­த­ர­கர்­க­ளி­டமோ, கொள்ளை லாபம் அடிக்­கும் பெரு­மு­த­லா­ளி­க­ளி­டமோ சிக்­கிக்­கொள்­ளா­மல், விவ­சா­யத்தை லாப­க­ர­மான தொழி­லாக மாற்­று­வ­தற்கு மிகப்­பெ­ரும் செயல்­திட்­டம் தேவை. மழை­யில்­லா­மல் விவ­சா­யம் பொய்த்­துப் போகும்­போது, விவ­சா­யி­க­ளுக்கு மாற்று வேலை­கள் கிடைப்­ப­தற்­கான வழி­மு­றை­கள் காணப்­பட வேண்­டும்.
இளைய தலை­மு­றை­யி­னர் விவ­சா­யம் சார்ந்த தொழில்­நுட்­பங்­களில் பயிற்­று­விக்­கப்­பட வேண்­டும். அவர்­கள் நக­ரங்­களை நோக்கி இடம்­பெ­ய­ரா­மல் காப்­ப­தும் அர­சாங்­கத்­தின் கடமை. மண்­ணை­யும் மக்­க­ளை­யும் மலட்­டுத்­த­னத்­தோடு அணு­கா­மல், அவர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வது ஒன்றே குறிக்­கோள் என்ற நினைப்­போடு, ஒருங்­கி­ணைந்த முறை­யில் திட்­டங்­கள் வகுக்­கப்­பட்­டால் தான், விவ­சா­ய­மும் விவ­சா­யி­களும் காப்­பாற்­றப்­ப­டு­வார்­கள்.
குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை என்­பது இந்­தத் தொடர் சங்­கி­லி­யில் ஒரு கண்­ணி­தான். அதனை மட்­டுமே சரி­செய்­வ­தால், மொத்த சங்­கி­லி­யும் உறு­தி­ய­டை­யும் என்று சொல்ல முடி­யாது. கண்­ணி­யின் பல்­வேறு இடங்­களில் வித­வி­த­மான பிரச்­னை­கள் தலை­தூக்­கி­யுள்ளன என்­பது கண்­கூடு.இந்த விலை­யேற்­றத்­தி­னால், விவ­சாய ஏற்­று­ம­தி­கள் பாதிக்­கப்­படும், இந்­தி­யா­வின் பண­வீக்­கம் அதி­க­மா­கி­வி­டும் என்­றெல்­லாம் பய­மு­றுத்­து­கி­றார்­கள். ஆனால், அதை­விட முக்­கி­யம் இங்­கே­யுள்ள விவ­சா­யி­கள்.
‘வரப்­புர கோன் உயர்­வான்’ என்­ப­தற்கு இணங்க, அர­சாங்­கம் விவ­சா­யி­கள் பக்­கம் கவ­னத்­தைத் திருப்­பி­யி­ருப்­பதே வர­வேற்­கத்­தக்க முடிவு. இது போதா­து­தான். இன்­னும் முன்­ன­தா­கவே தொடங்­கி­யி­ருக்க வேண்­டும் தான்.ஆனால், இதுவே ஆரம்­ப­மாக இருந்து, அடுத்­த­டுத்த செயல்­திட்­டங்­க­ளி­னால் மேம்­பாடு அடை­யு­மே­யா­னால், விவ­சா­யி­களின் வயிறு அர­சாங்­கத்தை வாழ்த்­து­வது நிச்­ச­யம்.
ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)