பதிவு செய்த நாள்
17 ஜூலை2018
00:17
புதுடில்லி : நாட்டின் தங்கம் இறக்குமதி, நடப்பு 2018 – 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 25 சதவீதம் குறைந்து, 840 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, கடந்த, 2017 – 18ம் நிதியாண்டின் இதே காலாண்டில், ௧,130 கோடி டாலராக இருந்தது.
இந்தாண்டு ஜனவரி முதல், சர்வதேச சந்தையிலும், உள்நாட்டிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, தங்கம் இறக்குமதியும் சரிவடைந்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் கணக்கு பற்றாக்குறை, சற்று குறைய வாய்ப்புள்ளது. கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், அதிக அளவிலான தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதியாகின.
இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2 சதவீதம் அதிகரித்து, 4,900 கோடி டாலராக உயர்ந்தது. இது, முந்தைய, 2016 –17ம் நிதியாண்டில், 0.6 சதவீதம் அதிகரித்து, 1,440 கோடி டாலர் அளவிற்கே உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|