‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதா வாபஸ்‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதா வாபஸ் ... இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத கடும் வீழ்ச்சி : 69.12 இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத கடும் வீழ்ச்சி : 69.12 ...
40 பொருட்களுக்கு வரி குறைய வாய்ப்பு; ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை கூடுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2018
23:58

புதுடில்லி : நாளை, டில்­லி­யில் நடை­பெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில், 30 – -40 பொருட்­க­ளின் வரி குறைக்­கப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

டில்­லி­யில், ஜி.எஸ்.டி.,கவுன்­சி­லின், 28வது கூட்­டம், அதன் தலை­வர் அருண் ஜெட்லி தலை­மை­யில், நாளை நடை­பெற உள்­ளது. கைத்தறி ஜவுளி இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., வரி விதிப்­பின் கீழ், அதிக அள­வில் நிறு­வ­னங்­கள் இணைந்து வரு­கின்­றன. அத்­து­டன், வரி செலுத்­தும் நிறு­வ­னங்­கள் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், சில பொருட்­க­ளின் வரியை குறைத்­தா­லும், ஜி.எஸ்.டி., வரு­வாய் அதி­கம் பாதிக்­காது என, மத்­திய அரசு கரு­து­கிறது.

அத­னால், நாளை, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில், பல்­வேறு பொருட்­க­ளின் வரி குறைப்பு குறித்து முடிவு எடுக்­கப்­படும் என, தெரி­கிறது.பெரும்­பா­லான கைத்­தறி ஜவுளி வகை­கள், கைவினை பொருட்­கள், சானிட்­டரி நாப்­கின்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான, 12 சத­வீத, ஜி.எஸ்.டி., குறைக்­கப்­படும் என, தெரி­கிறது. அமைப்பு சாரா துறை­யில், வேலை­வாய்ப்பை உரு­வாக்க, அத்­துறை சார்ந்த சில பொருட்­கள் மற்­றும் சேவை­க­ளின் வரி குறைய வாய்ப்பு உள்­ளது.

வரு­வாய் பாதிப்­பின்றி, வேலை­வாய்ப்­பை­யும், நுகர்­வை­யும் அதி­க­ரிக்க உத­வும் பிரி­வு­க­ளைச் சேர்ந்த, 30 -– 40 பொருட்­க­ளின் வரி குறைக்­கப்­படும் என, தெரி­கிறது.

சட்ட திருத்தம் :
அத்­து­டன், ஜி.எஸ்.டி., பதிவு நடை­மு­றையை சுல­ப­மாக்­கு­வது, கணக்கு தாக்­க­லுக்கு எளி­மை­யான புதிய படி­வத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வது உட்­பட, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில், 46 பிரி­வு­களில் திருத்­தம் மேற்­கொள்­வது குறித்­தும், ஜி.எஸ்.டி., கவுன்­சில் முடி­வெ­டுக்க உள்­ளது. வேளாண் துறை மேம்­பாட்­டிற்­காக, ஜி.எஸ்.டி.,யில், 1 சத­வீ­தம் கூடு­தல் வரி விதிக்­க­வும், சில்­லரை விற்­ப­னையில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு சலு­கை­கள் அளிப்­பது குறித்­தும், கவுன்­சில் விவா­திக்­கும் மேலும், ஜி.எஸ்.டி., பிரி­வு­களை, நான்­கில் இருந்து, மூன்று அல்­லது இரண்­டாக குறைப்­பது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­படும். இந்த கூட்­டத்­தில், இயற்கை எரி­வாயு மற்­றும் விமான எரி­பொ­ருளை, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வரும் திட்­டம் இடம்­பெ­றாது என, தெரி­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

328 பொருட்கள் :
கடந்த, 2017 நவம்­ப­ரில், 28 சத­வீத வரி பிரி­வில் இருந்து, 178 பொருட்­கள் நீக்­கப்­பட்­டன. உண­வ­கங்­க­ளுக்­கான வரி, 5 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டது.இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், 54 சேவை­கள் மற்­றும் 29 பொருட்­க­ளுக்கு வரி குறைக்­கப்­பட்­டது.இந்த வகை­யில், மொத்­தம், 328 பொருட்­க­ளின் வரி குறைக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­லை­யி­லும், 2017- – 18ம் நிதி­யாண்­டில், ஏப்., – டிச., வரை, ஜி.எஸ்.டி., மூலம், 7.41 லட்­சம் கோடி ரூபாய் வரு­வாய் கிடைத்­துள்­ளது. அதா­வது, சரா­ச­ரி­யாக, மாதம், 89,885 கோடி ரூபாய் வரி வரு­வாய் கிடைத்­துள்­ளது. நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டில், ஏப்­ர­லில், வரி வசூல், 1.03 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­தது. இது, மே மற்­றும் ஜூன் மாதங்­களில், முறையே, 94,016 கோடி மற்­றும் 95,610 கோடி ரூபா­யாக இருந்­தது.

தமிழகம் கோரிக்கை :
டில்­லி­யில் நடை­பெ­றும் ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில், தமி­ழ­கத்­தின் சார்­பில், மீன்­வ­ளத் துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார் பங்­கேற்­கி­றார். மீன்­பிடி கரு­வி­கள், வெண்­ணெய், நெய், கைத்­தறி, காதி உட்­பட ‘50 பொருட்­க­ளின் மீதான வரி குறைப்பு மற்­றும் வரி விலக்­குக்கு, தமி­ழ­கத்­தின் சார்­பில் ஏற்க­னவே கோரிக்கை வைக்­கப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)