பங்குச் சந்தை நிலவரம்பங்குச் சந்தை நிலவரம் ... பங்குச்சந்தை: கவ­னத்தை ஈர்க்­கும் ஈ.டி.எப்., முத­லீ­டு­கள் பங்குச்சந்தை: கவ­னத்தை ஈர்க்­கும் ஈ.டி.எப்., முத­லீ­டு­கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2018
23:29

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை, தொடர்ந்து மூன்­றா­வது வார­மாக சரிந்து வரு­கிறது. இந்த மாதம் மட்­டும், 1 பேர­லுக்கு, ஒன்­பது டாலர் விலை குறைந்­துள்­ளது. கடந்த புதன் கிழ­மை­யன்று, அமெ­ரிக்க எண்­ணெய் அமைச்­ச­கம் வெளி­யிட்ட தக­வ­லின்­படி, அமெ­ரிக்­கா­வின் ஷேல் எண்­ணெய் உற்­பத்தி, வர­லாற்று உயர்­வாக, தின­சரி, 11 மில்­லி­யன் பேரல்­கள் என்­பதை எட்­டி­யது.நவம்­பர் 2017 பின், தின­சரி 1 மில்­லி­யன் பேரல்­கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது. வாரம் ஒரு முறை வெளி­வ­ரும் அமெ­ரிக்க எண்­ணெய் இருப்பு விப­ரப்­படி, கடந்த வாரத்­தில், 5.8 மில்­லி­யன் பேரல்­கள் அதி­க­ரித்­தது.

இது, 3.6 மில்­லி­யன் பேரல்­கள் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட சூழ­லில் வெளி­வந்­த­தால், விலை வீழ்ச்சி அடைந்­தது.நில­வி­வ­ரும் அமெ­ரிக்கா, சீனா இடை­யி­லான வர்த்­தக மோதல் கார­ண­மா­க­வும், பொரு­ளா­தார வளர்ச்சி தடை­படும் என்ற கண்­ணோட்­டத்­தில், கச்சா எண்­ணெ­யின் தேவை குறை­யக் கூடும் என்ற நோக்­கத்­தி­னா­லும் விலை சரிவு காணப்­பட்­டது.

இவ்­வா­றான அர­சி­யல் சார்ந்த முடி­வு­க­ளால், சந்­தை­யில், எண்­ணெய் மற்­றும் கமா­டிட்டி பொருட்­களின் விலை, அதிக ஏற்­றத் தாழ்­வு­களை சந்­தித்து வரு­கிறது. கடந்த வெள்­ளி­யன்று விலை­யில் சிறிய ஏற்­றம் காணப்­பட்­டது. இந்­நி­லை­யில், சவுதி அரே­பி­யா­வின் மக்கா கவர்­னர் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார்.

அந்த அறிக்­கை­யில், சவுதி அரே­பி­யா­வின் உற்­பத்தி அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அதை கட்­டுக்­குள் கொண்­டு­வர, ஆகஸ்ட் மாதத்­தில், தின­சரி, 1 லட்­சம் பேரல் என்ற அள­வுக்கு, ஏற்­று­ம­தியை குறைக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­வித்­தார். இதன் மூல­மாக, சரி­வில் இருந்த எண்­ணெய் விலை, சிறி­த­ளவு மீண்­டது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,670 4,550 4,755 4,860என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 67.90 66.70 69.00 70.20


தங்கம், வெள்ளி
சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த வாரம், தங்­கம் மற்­றும் வெள்ளி, விலை சரிந்து வர்த்­த­க­மா­கின.அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான டால­ரின் மதிப்பு உயர்­வும், அமெ­ரிக்கா –-- சீனா இடையே நில­வி­வ­ரும் வர்த்­த­கம் மோத­லும், இதன் மூலம் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழல் கார­ண­மா­க­வும், தங்­கம் விலை சரிந்து, வர்த்­த­கம் நடக்­கிறது. மேலும், அமெ­ரிக்கா, தன் வட்­டி­ வி­கி­தத்தை தொடர்ந்து, இந்த ஆண்டு அதி­க­ரித்து வரு­கிறது. பொது­வா­கவே வட்டி விகி­தம் உய­ரும்­போது, தங்­கம் மீதான முத­லீடு ஆர்­வம் குறைந்து, அரசு கரு­வூ­லங்­கள் மற்­றும் அது சார்ந்த கடன் பத்­தி­ரங்­களின் மீது முத­லீடு செய்­வது வழக்­க­மா­கும்.

இத­னால், முத­லீட்­டா­ளர்­கள் தொடர்ந்து, தங்­கம் மீதான ஆர்­வத்தை குறைத்து, அரசு கரு­வூ­லங்­களில் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். வரும் காலங்க­ளி­லும் தங்­கம் விலை­யில் சரிவு தோன்­றும் என்ற கருத்து நில­வு­கிறது. சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த ஜன­வரி முதல் ஜூன் வரை­யி­லான, 6 மாதங்­களில், 1 அவுன்ஸ் தங்­கத்­தின் விலை, 150 டாலர் அள­வுக்கு குறைந்­துள்­ளது. அதா­வது, 1,360 டால­ரி­லி­ருந்து, 1,210 டால­ராக குறைந்­துள்­ளது.

இருப்­பி­னும், நமது உள்­நாட்டு ஆப­ரண சந்­தை­யில், சர்­வ­தேச சந்­தையை ஒப்­பிட்­டுப் பார்க்­கும்­போது, விலை சரிவு குறை­வா­கவே இருந்­தது. இதற்கு முக்­கிய கார­ணம், டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு ஆகும். கடந்த வாரத்­தில், இறுதி நாட்­க­ளான வியா­ழன் மற்­றும் வெள்ளி கிழ­மை­களில், தங்­கம் சிறி­த­ளவு விலை ஏற்­றம் கண்டு, வர்த்­த­கம் முடி­வுற்­றது.

தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்
சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 27,775 27,450 28,150 28,350காம்எக்ஸ் (டாலர்) 1,215 1,202 1,234 1,241

வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 38,080 37,610 38,550 39,100காம்எக்ஸ் (டாலர்) 15.35 15.15 15.70 15.95


செம்பு:
செம்பு விலை­யா­னது, 2017ம் ஆண்டு உயர்­வுக்­குப் பின், இந்த ஆண்டு துவக்­கம் முதலே சரிவை சந்­தித்து வரு­கிறது. தொடர்ந்து ஏழா­வது மாத­மாக, விலை குறைந்து வரு­கிறது. இதற்கு இரு முக்­கிய கார­ணங்­கள் உள்ளன. முத­லா­வ­தாக, அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்வு. இரண்­டா­வ­தாக, நில­வி­வ­ரும் நாடுக­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல்.

சீனா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­கள், தங்­க­ளது இறக்­கு­மதி பொருட்­க­ளுக்­கான வரியை உயர்த்தி வரு­கின்றன. இத­னால், அனைத்து நிலை­க­ளி­லும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. தொழிற்­சாலை மூலப்­பொ­ருட்­க­ளான செம்பு, நிக்­கல், இரும்பு உள்­ளிட்ட பொருட்­களின் விலை­களில் நல்ல தாக்­கம் ஏற்­பட்­டுள்­ளது.

சீனா­வின் தேவை நுகர்வு தேவை குறைந்­த­தன் கார­ண­மாக, விலை கடு­மை­யாக சரிந்­துள்­ளது. வரும் நாட்­களில், இத்­த­கைய போக்கு கட்­டுக்­குள் கொண்டு வரப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 414.00 409.00 419.00 424.50

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)