சமூக வலைதள நிர்வாகம்ஆள் தேடும் கனரா வங்கிசமூக வலைதள நிர்வாகம்ஆள் தேடும் கனரா வங்கி ... இந்திய ரூபாய் மதிப்பில் மேலும் சரிவு : 70.32 இந்திய ரூபாய் மதிப்பில் மேலும் சரிவு : 70.32 ...
கேரளாவில் வெள்ளப்பெருக்கு தமிழகத்தில் சரக்குகள் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
00:15

சேலம்:கேர­ளா­வில், மழை­யால் ஏற்­பட்ட வெள்­ளப் பெருக்கு கார­ண­மாக, தமி­ழ­கத்­தில் இருந்து லாரி­கள் இயக்­கு­வது நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னால், 100 கோடி ரூபாய் மதிப்­புள்ள சரக்­கு­கள் தேக்­கம் அடைந்­துள்ளன.

தமி­ழ­கத்­தில் இருந்து கேர­ளா­வுக்கு, காய்­க­றி­கள், அரிசி, மாடு­கள், ஜவுளி, இரும்பு கம்­பி­கள், கோழி, முட்டை, சிமென்ட், மளிகை சாமான்­கள் ஆகி­ய­வை­யும், அங்­கி­ருந்து தமி­ழ­கத்­துக்கு மரச் சாமான்­கள், ஓடு­கள், மீன்­கள் ஆகி­ய­வை­யும் லாரி­கள் மூலம் எடுத்து வரப்­ப­டு­கின்றன.

கேர­ளா­வில் தற்­போது பெய்து வரும் கன மழை கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வெள்­ளப் பெருக்­கால், எர்­ணா­கு­ளம், கொச்சி, கோழிக்­கோடு, ஆலப்­புழா, கண்­ணுார் மாவட்­டங்­க­ளுக்கு, சரக்கு பரி­மாற்­றத்­தில் ஈடு­பட்டு வந்த லாரி­கள், ஆக., 9 இரவு முதல் இயக்­கப்­ப­ட­வில்லை.இது குறித்து, தமி­ழக லாரி புக்­கிங் ஏஜென்­டு­கள் சம்­மே­ளன மாநில தலை­வர், ராஜ­வ­டி­வேல் கூறி­ய­தா­வது:

தினந்­தோ­றும், தமிழ­கத்­தின் முக்­கிய நக­ரங்­களில் இருந்து, கேர­ளா­வுக்கு கொண்டு செல்­லப்­பட வேண்­டிய, 20 கோடி ரூபாய் மதிப்­புள்ள சரக்­கு­களும், அங்­கி­ருந்து தமி­ழ­கத்­துக்கு வர­வேண்­டிய, 10 கோடி ரூபாய் சரக்­கு­களும் தேங்­கி­யுள்ளன.

தமி­ழ­கத்­தில், ஐந்து நாட்­களில், 100 கோடி ரூபாய் மதிப்­பி­லும், கேர­ளா­வில், 50 கோடி ரூபாய் மதிப்­பி­லான சரக்­கு­களும் தேங்­கி­உள்ளன.அதே நேரத்­தில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் நலன் கருதி, அத்­தி­யா­வ­சிய பொருட்­கள், மருந்து பொருட்­கள், காய்­க­றி­கள், ஆகி­யவை குறைந்த எண்­ணிக்­கை­யி­லான லாரி­களில் அனுப்பி வைக்­கப்­பட்டு வரு­கின்றன.

கேரள மாநி­லத்­துக்கு லாரி­களின் இயக்­கம் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தால், லாரி உரி­மை­யா­ளர்­கள், புக்­கிங் ஏஜென்­டுக­ளுக்கு வரு­வாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.மேலும் இத்­துறை சார்ந்த பலர் வேலை வாய்ப்­பை­யும் இழந்­துஉள்­ள­னர்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)