பதிவு செய்த நாள்
22 ஆக2018
00:45
புதுடில்லி : பிரபல சி.கே.பிர்லா குழுமத்தை சேர்ந்த, ஓரியன்ட் எலக்ட்ரிக் லிமிடெட் நிறுவனம், அதன், 9 வாட் எல்.இ.டி., பல்பின், சிறந்த எரிசக்தி செயல்திறனுக்கான, 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று உள்ளது.
எரிசக்தி திறனுக்கான தர நிறுவனமான, பீரோ ஆப் எனர்ஜி எபிஷியன்ஷி, இந்த சான்றிதழை வழங்கி உள்ளது. எல்.இ.டி., பல்புகளுக்கான, 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றதை அடுத்து, இத்தகைய ரேட்டிங்கை பெறும் முதல், லைட்டிங் பிராண்டு என்ற சிறப்பையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் லைட்டிங் பிரிவின் முதுநிலை துணைத்தலைவர் மற்றும் வர்த்தக தலைவரான, புனீத் தவான் கூறியதாவது: எல்.இ.டி., பல்புகளுக்கான, 5 ஸ்டார் ரேட்டிங் பெறும் முதல் நிறுவனமாக திகழ்வதில், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள், நல்ல வெளிச்சமும் மின்சக்தி சேமிப்பையும் பெறுவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2016ல் 3 ஸ்டார் ரேட்டிங் உள்ள பல்புகளை அறிமுகம் செய்துள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளில், எங்களது, எல்.இ.டி., வர்த்தகம், எட்டு மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. எங்களது தயாரிப்புகள் தரம் மற்றும் செலவை பொறுத்தவரை, உலகளாவிய தர நிலைகளுக்கு ஒப்பானதாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|