தமிழகத்தில், ‘யமஹா மியூசிக்’ 2019ல் தயாரிப்பு துவக்கம்தமிழகத்தில், ‘யமஹா மியூசிக்’ 2019ல் தயாரிப்பு துவக்கம் ... வளம் சேர்க்குமா வங்கிகள் இணைப்பு? வளம் சேர்க்குமா வங்கிகள் இணைப்பு? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை: பொருளாதார சவால்களுக்கு தயாராக வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
23:27

நிதி நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்சி எப்­படி இருக்க வேண்­டும்? அதி­வேக வளர்ச்சி, நிதி நிறு­வ­னங்­களை எப்­படி பாதிக்­கும்? அதற்கு, நிறு­வன அள­வில் எப்­படி எல்­லாம் தயார்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்? ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும், அந்த நிறு­வ­னங்­கள், தொழில் ரீதி­யாக எடுக்­கும் தவ­றான முடி­வு­களை எப்­படி சரி செய்­கின்­ற­னர்?

இப்­படி பல முக்­கிய கேள்­வி­களை நாம் தொடர்ந்து கேட்டு, ஆய்­வுக்கு உட்­ப­டுத்த வேண்­டும். அதை உணர்ந்து இருக்க வேண்­டி­யது ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரின் கடமை. இதற்கு கார­ணம், நம் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், நிதி நிறு­வ­னங்­க­ளின் பங்கு தொடர்ந்து கூடி வரு­வது தான். அனைத்து தரப்­பி­ன­ருக்­கும் நிதி ஆதா­ரம் சேரும் வண்­ணம், நம் பொரு­ளா­தா­ரம், நிதி மய­மாக்­கப்­ப­டு­வ­தின் முக்­கிய விளை­வாக இதைப் பார்க்க வேண்­டும்.

சந்தை குறி­யீ­டான, ‘சென்­செக்ஸ்’ மற்­றும் ‘நிப்டி’யில், கிட்­டத்­தட்ட, 39 சத­வீ­தம் வரை நிதி நிறு­வ­னங்­க­ளின் ஆளுமை அதி­க­ரித்­துள்­ளது. தனி­யார் வங்­கி­கள், பொதுத்­துறை வங்­கி­கள், என்.பி.எப்.சி., நிறு­வ­னங்­கள், மைக்­ரோ­ பை­னான்ஸ் நிறு­வ­னங்­கள், வீட்­டுக்­க­டன் நிறு­வ­னங்­கள், உட்­கட்­ட­மைப்பு நிதி நிறு­வ­னங்­கள் என, பல உள்­ளன.

இவை மட்­டு­மல்ல; சிறு நிதி வங்­கி­கள், மியூச்­சு­வல் பண்ட் நிறு­வ­னங்­கள், போர்ட்­போ­லியோ மேலாண்மை நிறு­வ­னங்­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் என, பல தரப்பு நிதி நிறு­வ­னங்­க­ளை­யும் தொடர்ந்து ஆய்வு மற்­றும் கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்த வேண்­டி­யது சந்­தை­யின் கடமை. எந்த ஒரு அங்­கத்­தில் சிக்­கல் ஏற்­பட்­டா­லும், அது மிக விரை­வாக மற்ற இடங்­களில் தாக்­கு­தல் ஏற்­ப­டுத்­தக் கூடிய தன்மை உடை­யது.இத்­த­கைய தாக்­கு­தல், ஒட்­டு­மொத்த உட­லை­யும் அதா­வது, சந்­தை­யை­யும் பாதிக்­கும். ஒவ்­வொரு அங்­க­மும் பிற அங்­கங்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பு­டை­யவை என்­பதே இதற்கு அடிப்­படை கார­ணம்.

அனைத்து வகை­யான நிறு­வ­னங்­களும், பங்­குச் சந்­தை­யு­டன் நெருங்­கிய தொடர்­பு­டை­யவை. அந்த தொடர்­பு­களை புரிந்து கொள்­வோம்.நிதி நிறு­வ­னங்­க­ளின் பங்­கு­கள், சந்­தை­யில் வர்த்­த­கம் செய்­யப்­ப­டு­கின்­றன.பங்­குச் சந்­தை­யில் அவை முக்­கிய முத­லீட்­டா­ளர்­க­ளாக இருக்­கின்­றன. தன் தொழில் வளர்ச்­சிக்கு தேவை­யான பணத்தை, சந்­தை­யில் இருந்தே அவை ஈட்­டு­கின்­றன.

கடன் மற்­றும் முத­லீடு மூல­மாக, தொடர்ந்து சந்­தை­யில் நிதி ஈட்­டு­வ­தும், கொடுப்­ப­து­மாக இந்த நிறு­வ­னங்­கள் இயங்­கு­கின்­றன. முக்­கி­ய­மாக, இவை ஒன்­றுக்­கொன்று நிதி கொடுப்­ப­தும், பெறு­வ­து­மாக தொடர்ந்து நெருங்­கிய தொடர்­பில் இயங்­கு­கின்­றன. சந்­தை­யில் சில்­லரை முத­லீட்­டா­ளர்­க­ளு­டன் இவற்­றுக்கு நெருங்­கிய தொடர்பு உண்டு. இவை வாடிக்­கை­யா­ளர்­க­ளா­க­வும், நுகர்­வோ­ரா­க­வும், முத­லீட்­டா­ளர்­க­ளா­க­வும், கடன் கொடுப்­ப­வர்­க­ளா­க­வும் பல வகை­யில் பிணைந்து செயல்­ப­டு­கின்­றன. இதுவே, நவீன சந்தை பொரு­ளா­தா­ரத்­தின் அடிப்­படை கட்­ட­மைப்பு.

இந்த கட்­ட­மைப்பு, சீராக தொடர்ந்து இயங்க, எந்த தரப்­பில் சிக்­கல் ஏற்­பட்­டா­லும், அது பிற இடங்­களை தாக்­காத வகை­யில் பார்த்­துக் கொள்ள வேண்­டும். இதுவே அர­சின் நிதி­ய­மைச்­ச­கம், ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ., மற்­றும் பி.எம்.ஓ.,வின் முக்­கிய பொறுப்பு. உலக அள­வில் ஏற்­படும் மாற்­றங்­க­ளுக்­கும், நம் பொரு­ளா­தா­ரத்­தில் எதிர்­கொள்ள வேண்­டிய சவால்­க­ளுக்­கும் ஒருங்­கி­ணந்த முறை­யில் கொள்­கை­க­ளை­யும், திட்­டங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்தி, அரசு உட­னடி தீர்வு காண வேண்­டும். வரும் மாதங்­களில் தோன்­றக்­கூ­டிய பொரு­ளா­தார சவால்­களை எதிர்­கொள்ள, நிதித் துறை நிறு­வ­னங்­கள், தம்மை தயார்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். வளர்ச்சி குறைந்­தா­லும், வலிமை காக்க முற்­பட வேண்­டும்.

–ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)