கமாடிட்டி சந்தை  கச்சா எண்ணெய்கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய் ...  சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., வெளியீட்டில் ரூ.8,000 கோடி திரட்ட திட்டம் சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., வெளியீட்டில் ரூ.8,000 கோடி திரட்ட திட்டம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிதி்ததுறை பங்குகள் என்னவாகும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2018
00:44

அக்­டோ­பர் மாதம் கண்ட ஏற்ற இறக்­கங்­களை கடந்து, சற்றே சோர்­வோடு தீபா­வளி முகூர்த்த வர்த்­த­கத்தை நோக்கி சந்தை நகர்­கிறது.நிதித்­துறை பங்­கு­கள் என்ன ஆகும்?


பொரு­ளா­தார செய்­தி­கள் தொடர்ந்து மாறிக்­கொண்டே இருக்­கும் சூழ­லில், சந்தை செல்­லும் திசை­ய­றி­யாது, முத­லீட்­டா­ளர்­கள் குழம்­பி­யி­ருப்­பது தெளி­வாக வெளிப்­ப­டு­கிறது.அக்­டோ­ப­ரில் வெகு­வாக சரிந்த நிதித்­துறை பங்­கு­கள், மீண்­டும் இழந்த மதிப்பை பெறுமா... என்ற கேள்வி முத­லீட்­டா­ளர்­கள் மன­தில் முக்­கிய இடம் வகிக்­கிறது.கூடவே, இது­வரை
சந்­தை­யின் தலை­மையை கைப்­பற்றி வைத்­தி­ருந்த இத்­துறை பங்­கு­கள், அந்த இடத்தை தொடர்ந்து தக்­க­வைத்­துக் கொள்­ளுமா... என்ற சந்­தே­க­மும்எழுந்­துள்­ளது.

கடந்த ஆண்டு சந்­தைக்கு தலைமை வகித்த குறிப்­பிட்ட நிதித்­துறை பங்­கு­கள், தற்­போது, இழந்த மதிப்பு முழு­வ­தை­யும் மீண்­டும் எளி­தில் திரும்ப பெற­மு­டி­யாது, என்­ப­தில் சந்­தே­க­மில்லை.இதற்கு பல கார­ணங்­கள் உள்­ளன. முக்­கி­ய­மான கார­ணம், அந்த பங்­கு­கள், சமீ­ப­கா­லத்­தில் எட்­டிய வான­ளா­விய மதிப்பு. நிறு­வன வளர்ச்­சியை பெரி­தும் கடந்து, முத­லீட்டு வரை­முறை­க­ளால் நியா­யப்­ப­டுத்த முடி­யாத நிலையை அவை தொட்­டன.

இந்த நிறு­வ­னங்­கள், மீண்­டும் வளர்ச்­சிப் பாதைக்கு திரும்­பி­னா­லும், அவை காணும் வளர்ச்­சி­யின் விளை­வாக, பங்கு விலை­கள் சமீ­பத்­தில் எட்­டிய உச்­சங்­களை மீண்­டும் தொட வாய்ப்­பில்லை. அது­மட்­டு­மல்ல, அந்த வளர்ச்­சிக்கு, முன்பு போல, நியா­யப்­ப­டுத்த முடி­யாத அள­வி­லான சந்தை தரும் மதிப்­பீ­டும் கிடைக்­காது.ஆக, மெது­வான விலை வளர்ச்­சியை மட்­டுமே, சமீ­பத்­தில் சந்­தை­யின் பிடிப்பை பெற்ற நிதித்­துறை பங்­கு­களில் எதிர்­பார்க்­க­லாம்.


அத்­த­கைய சூழ­லில், குறு­கிய காலத்­தில், பழக்­கப் போக்­கில் மீண்­டும் விலை வேக­மாக உய­ரும்­பட்­சத்­தில், பல பங்­கு­களை விற்­று­விட்டு வெளி­யேற வேண்­டிய கட்­டா­யம், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இருக்­கிறது. இதை உணர்ந்து நடப்­பது நல்­லது.அரசோ, ரிசர்வ் வங்­கியோ எடுக்­கும் தற்­கா­லிக முடி­வு­கள், நிறு­வ­னங்­க­ளின் கஷ்­டங்­க­ளுக்கு ஒரு தற்­கா­லிக நிவா­ர­ண­மாக இருக்­குமே தவிர, அது நெடுங்­கால தீர்­வாக அமை­யாது. சந்தை நிவா­ர­ணத்தை தீர்­வாக புரிந்­து­கொண்­டால், அதன் விலையை முத­லீட்­டா­ளர்­கள்­தான் கொடுக்க வேண்­டும்.

அடுத்து, சந்­தை­யின் தலை­மைக்கு வரு­வோம்.வரும் ஆண்­டில், சந்­தை­யின் தலைமை நிதித்­துறை வசமே இருக்­குமா? இந்த கேள்­விக்­கான விடையை, சற்று நுணுக்­க­மாக அணுகி அறிய வேண்­டும்.நிதித்­துறை, தொடர்ந்து பொரு­ளா­தார வளர்ச்­சியை வழி­ந­டத்­தும் ஒரு முன்­னணி இயந்­தி­ர­மாக இருக்­கும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. அதன் பொரு­ளா­தார முக்­கியத்­து­வம் குறை­ய­வும் வாய்ப்­பில்லை.


அத்­த­கைய சூழ்­நி­லை­யில், சந்­தை­யின் தலைமை அத­னி­டம் தொடர்ந்து நிலைக்­கும். ஆனால், தற்­போ­துள்ள அளவு முக்­கி­யத்­து­வம் இருக்­காது என்றே தோன்­று­கிறது.புதிய துறை­கள் சந்­தை­யில் முக்­கி­ய­த்து­வம் பெற்று, அதன் தாக்­கம் குறி­யீ­டு­க­ளி­லும் வெளிப்­படும் என்றே தோன்­று­கிறது. உற்­பத்தி துறை, பல­கா­ல­மாக நலிந்­தி­ருந்த நிலைமை மாறி, வரும் ஆண்­டு­களில் வள­மை­யும், வலி­மை­யும் வெளிப்­ப­டுத்­தும் துறை­யாக மாறும் என்­ப­தற்­கான ஆரம்ப அறி­கு­றி­கள் தெரி­கின்­றன.

இந்த மாற்­றங்­களை உன்­னிப்­பாக தொடர்ந்து கவ­னித்து, அவற்­றின் தாக்­கத்தை சரி­யாக அள­விட்டு, பலன் பெறும் நிறு­வ­னங்­களை அடை­யா­ளம் கண்டு, அவற்­றில் முத­லீடு செய்­வது, நம் ஒவ்­வொ­ரு­வ­ரின் குறிக்­கோ­ளாக இருக்க வேண்­டும். அதற்­கான ஆராய்ச்­சி­க­ளி­லும், நிறு­வன ஆய்­வு­க­ளி­லும் ஈடு­ப­டு­வது, நமது முக்­கிய பணி­யாக இருக்க வேண்­டி­யது அவ­சி­யம்.


ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)