பதிவு செய்த நாள்
16 ஜன2019
00:05
கோல்கட்டா: டிவி தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும், 'எல்.இ.டி., பேனல்' இறக்குமதிக்கான சுங்க வரியை நீக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, 2018, பிப்ரவரியில், எல்.இ.டி., பேனல் இறக்குமதிக்கு, 10 சதவீத வரி விதித்தது. இதனால், டிவி தயாரிப்பு செலவு அதிகரித்தது.இதையடுத்து, மார்ச்சில், இறக்குமதி வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
எனினும், ஆசிய நாடுகளில் இருந்து, வரிச் சலுகையுடன் டிவி இறக்குமதி செய்வது லாபகரமாக இருந்ததால், சாம்சங் நிறுவனம், இந்தியாவில் டிவி தயாரிப்பை நிறுத்தியது. வியட்னாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து அதிக அளவில் டிவிக்களை இறக்குமதி செய்தது.
எல்.ஜி., நிறுவனமும் உள்நாட்டு டிவி தயாரிப்பை குறைத்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறது.இது, 'இந்தியாவில் தயாரிப்போம்' கொள்கைக்கு எதிராக உள்ளதால், மத்திய அரசு, டிவி எல்.இ.டி., பேனல் இறக்குமதி வரியை நீக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்இவ்வாறு அவர் கூறினார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|