88 நிறுவனங்களின், 50 சதவீத வாராக்கடன் மீட்பு:திவால் நடவடிக்கையால் விரைவான வசூல் 88 நிறுவனங்களின், 50 சதவீத வாராக்கடன் மீட்பு:திவால் நடவடிக்கையால் விரைவான ... ...  டெபிட் கார்டை ‘லாக்’ செய்வது எப்படி டெபிட் கார்டை ‘லாக்’ செய்வது எப்படி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பயன்படுத்திய கார் கடன் தேர்வு செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
00:00

புதிய கார் விற்பனை சந்தை வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில், ‘யூஸ்ட் கார்’ எனப்படும், பயன்படுத்திய கார் விற்பனை சந்தை வளர்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கார் போலவே, பயன்படுத்திய கார் வாங்கவும் வங்கிகள் கடன் தருகின்றன. நீங்களும் பயன்படுத்திய கார் வாங்க, கடன் வசதியை நாட விரும்பினால் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:

ஆவணங்கள் முக்கியம்:
பயன்படுத்திய கார் வாங்க தீர்மானிக்கும் போது கார் புதிது போல, நன்றாக இருக்கிறதா? என நிச்சயம் கவனிப்பீர்கள். அதைவிட முக்கியமானது காருக்கு தேவையான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா? என உறுதி செய்து கொள்வது. ஆர்.சி., புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் தான் வங்கிகள் கடன் வழங்கும்.

கார் எப்படி?
வாங்கும் கார் நல்ல நிலையில் இருக்கிறதா? என்பதை நீங்கள் கவனிப்பது போலவே வங்கியும் கவனிக்கும். காரின் பயன்பாடு, அது எத்தனை பேர் கை மாறியுள்ளது, மைலேஜ் போன்ற அம்சங்களை கொண்டு கார் மதிப்பிடப்படும். ஓராண்டுக்கு முன் வாங்கப்பட்ட இரண்டு கார்களின் பொருளாதார மதிப்பு மாறுபடலாம்.

வயது என்ன?
பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு மேலான பழைய கார் எனில், கடன் கிடைப்பது கடினம். கடன் முடியும் நிலையில் காரின் வயது, 10 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அதனடிப்படையில் கடன் மற்றும் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும். எனினும், இது வங்கிக்கு வங்கி மாறுபடக்கூடியது.

ஆய்வு செய்யுங்கள்:
கடன் வசதியை உறுதி செய்வதற்கான அம்சங்கள் தவிர, கார் உங்களுக்கு ஏற்றதா? என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தேவை, பட்ஜெட் ஆகியவற்றுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்ய வேண்டும். நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், வங்கிகளிடம் சாதகமான அம்சங்களை கோரலாம்.

விற்பது யார்?
தனிநபர்கள், இடைத்தரகர்கள் மற்றும் நிறுவனங்கள் என, மூன்று தரப்பினரிடம் இருந்து பயன்படுத்திய கார் வாங்கலாம். பொதுவாக நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது நல்லது என கருதப்படுகிறது. காரின் நிலை, பராமரிப்பு, ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அவை பார்த்துக்கொள்கின்றன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)