பதிவு செய்த நாள்
09 ஆக2019
00:13
புதுடில்லி:டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த, முதல் காலாண்டில், 63.6 சதவீதம் சரிவை சந்தித்து, 701.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதுவே, கடந்த நிதியாண்டின், முதல் காலாண்டில், நிகர லாபம், 1,933.80 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.
இருப்பினும், இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருமானம், முதல் காலாண்டில், 36 ஆயிரத்து, 198 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மந்தமானதாலும், பருவ காலம், பணப் புழக்கம் ஆகியவற்றில் ஏற்பட்ட சிக்கல்களாலும், உள்நாட்டு நுகர்வு குறைந்து விட்டது.
மேலும், வாகன துறையும் சரிவை சந்தித்தது. இதையடுத்து தேவை குறைந்து, உருக்கின் விலை சரிவை சந்தித்தது. இருந்தபோதும், நிறுவனத்தின் வலுவான வணிக முறை காரணமாக சமாளிக்க முடிந்தது என, டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|