பதிவு செய்த நாள்
11 டிச2019
03:56
புதுடில்லி:உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, நவம்பர் மாதத்தில் சிறிதளவு சரிந்துள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, சியாம் தெரிவித்துஉள்ளது.
இதுகுறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, நவம்பர் மாதத்தில், 0.84 சதவீதம் குறைந்துள்ளது. இம்மாதத்தில், 2.64 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 2.66 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.கார்களை பொறுத்தவரை, 10.83 சதவீதம் குறைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், 1.60 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.80 லட்சம் கார்கள் விற்பனை ஆகியிருந்தன.
மோட்டார் சைக்கிள் விற்பனை, 14.87 சதவீதம் குறைந்துள்ளது. நடப்பு ஆண்டு நவம்பரில், 8.94 லட்சமும், கடந்த ஆண்டு நவம்பரில், 10.50 லட்சம் மோட்டார் சைக்கிள்களும் விற்பனை செய்யப்பட்டுஉள்ளன.மொத்த இருசக்கர வாகனங்கள் விற்பனை, 14.27 சதவீதம் குறைந்துள்ளது. நவம்பரில் மொத்தம், 14.11 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இதுவே, கடந்த ஆண்டு நவம்பரில், 16.46 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.இவ்வாறு இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|