பதிவு செய்த நாள்
14 ஜன2020
23:38
புதுடில்லி:நாட்டின், மொத்த விலை பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில், 2.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 8 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.
கடந்த நவம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.58 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் இது, 3.1 சதவீதமாக அதிகரித்து இருந்தது.இதுவே, 2018 டிசம்பரில், 3.46 சதவீதமாக இருந்தது.கடந்த டிசம்பரில், மொத்த விலை பணவீக்கம், 2.59 சதவீதமாக அதிகரித்ததற்கு முக்கிய காரணம், உணவுப் பொருட்களான வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை மிகவும் அதிகரித்ததாகும்.
உணவுப் பொருட்களின் பணவீக்கம், கடந்த டிசம்பர் மாதத்தில், 13.12 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய மாதமான நவம்பரில், 11 சதவீதமாக இருந்தது.உணவு அல்லாத பொருட்களின் பணவீக்க விகிதம், நான்கு மடங்கு அதிகரித்து, 7.72 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த நவம்பரில், 1.93 சதவீதமாக குறைந்து இருந்தது.
உணவுப் பொருட்களில், காய்கறிகள் விலை, 69.69 சதவீதம் அளவுக்கு, டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இதற்கு, வெங்காயத்தின் விலை ஏற்றம் முக்கிய காரணமாகும். வெங்காயத்தின் விலை, மதிப்பீட்டு மாதத்தில், 455.83 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து உருளைக்கிழங்கு, 44.97 சதவீதம் அளவுக்கு விலை அதிகரிப்பை கண்டது.
இதற்கிடையே, சில்லரை விலை பணவீக்கமும், கடந்த டிசம்பர் மாதத்தில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பால், சில்லரை விலை பணவீக்க விகிதம், 7.35 சதவீதமாக, டிசம்பர் மாதத்தில் உயர்வைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|