தொடர்ந்து 5வது மாதமாக நாட்டின் ஏற்றுமதி சரிவுதொடர்ந்து 5வது மாதமாக நாட்டின் ஏற்றுமதி சரிவு ... முதன் முறையாக சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது முதன் முறையாக சென்செக்ஸ் 42 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது ...
தொடர்ந்து 5வது மாதமாக நாட்டின் ஏற்றுமதி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
05:20

புது­டில்லி: நாட்­டின் ஏற்­று­மதி, கடந்த டிசம்­பர் மாதத்­தில், 1.8 சத­வீ­தம் சரி­வைக் கண்­டு உள்­ளது. இம்­மா­தத்­தில் மொத்­தம், 1.94 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான பொருட்­கள் ஏற்­று­மதி ஆகி­யுள்ளன.

இதை­ய­டுத்து, நாட்­டின் ஏற்­று­மதி, தொடர்ந்து ஐந்­தா­வது மாத­மாக சரிவை சந்­தித்­துள்­ளது.இந்த சரி­வுக்கு, பிளாஸ்­டிக், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­கள், ரசா­ய­னம், தோல் பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் ஏற்­று­மதி குறைந்­ததே முக்­கிய கார­ண­மாக அமைந்­துள்­ளது.

இறக்குமதிஏற்­று­ம­தியை போலவே, இறக்­கு­ம­தி­யும் குறைந்­துள்­ளது. நாட்­டின் இறக்­கு­மதி, டிசம்­பர் மாதத்­தில், 8.83 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. இம்­மா­தத்­தின் இறக்­கு­மதி மதிப்பு, 2.74 லட்­சம் கோடி ரூபாய். நாட்­டின் இறக்­கு­மதி தொடர்ந்து, ஏழா­வது மாத­மாக சரிந்து வரு­வ­தும் குறிப்­பி­டத்­தக்க விஷ­ய­மா­கும். இருப்­பி­னும், இறக்­கு­மதி குறைந்­ததை அடுத்து, நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 79 ஆயி­ரத்து, 875 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.

கடந்த, 2018ம் ஆண்டு, டிசம்­பர் மாதத்­தில், நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 1.03 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. மதிப்­பீட்டு மாதத்­தில், தங்­கத்­தின் இறக்­கு­மதி, 4 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்து, 17 ஆயி­ரத்து, 466 கோடி ரூபாய் அள­வுக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த டிசம்­ப­ரில், முக்­கி­ய­மான, 30 துறை­களில், 18 துறை­களில் ஏற்­று­மதி குறைந்­துள்­ளது. பிளாஸ்­டிக், 18.4 சத­வீ­த­மும், நவ­ரத்­தி­னம் மற்­றும் ஆப­ர­ணங்­கள், 7.55 சத­வீ­த­மும், தோல் பொருட்­கள், 5.26 சத­வீ­த­மும் சரி­வைக் கண்­டுள்ளன.

சேவைகள்கடந்த ஆண்­டில், ஏப்­ரல் முதல் டிசம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில் ஏற்­று­மதி, 1.96 சத­வீ­த­மும், இறக்­கு­மதி, 8.9 சத­வீ­த­மும் குறைந்­துள்­ளன. சேவை­கள் ஏற்­று­ம­தியை பொறுத்­த­வரை, நவம்­பர் மாதத்­தில், 1.28 லட்­சம் கோடி ரூபாய் ஆக­வும், இறக்­கு­மதி, 81 ஆயி­ரத்து 650 கோடி ரூபா­யா­க­வும் இருந்­த­தாக, ரிசர்வ் வங்­கி­யின் அறிக்கை தெரி­விக்­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)