பதிவு செய்த நாள்
26 ஜன2020
02:56
புதுடில்லி : குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ‘ரிலையன்ஸ் டிஜிட்டல்’ நிறுவனம், ‘டிஜிட்டல் இந்தியா விற்பனை’ எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இந்த டிஜிட்டல் இந்தியா விற்பனை திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
கடந்த, 24ம் தேதி துவங்கி, இன்றுடன் முடிவடையும் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், ‘எலக்ட்ரானிக்ஸ்’ பொருட்களில், ‘கேஷ்பேக்’ உள்ளிட்ட பல சலுகைகளை பெறலாம்.இந்த முறை, 26 சதவீத கேஷ்பேக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, 16 சதவீதம் கேஷ்பேக்குடன், 10 சதவீதம் மல்டி பேங்க் கேஷ்பேக்கும் சேர்ந்ததாகும். வீட்டு சாதனங்கள், மொபைல் போன்கள், லேப்டாப், உதிரிபாகங்கள், ‘டிவி’ என, பல்வேறு பொருட்களை இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் டாட் இன் இணையதளம் ஆகியவற்றில், இந்த சலுகைகளுடன் பொருட்களை வாங்கலாம். ரிலையன்ஸ் டிஜிட்டலில், 200க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிராண்டுகளில், 5,000த்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் ஆச்சரிய விலையில் கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|