பதிவு செய்த நாள்
23 மே2020
00:48
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கே.கே.ஆர்., 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாயை, ஜியோ பிளாட்பார்மில் முதலீடு செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் கடனை அடைக்கும் முயற்சியில், ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தின் பங்குகளை, பெரிய அளவில் விற்பனை
செய்து, நிதி திரட்டி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஜியோவின் பங்குகளை தற்போது, கே.கே.ஆர்., வாங்க உள்ளது.
இது குறித்த முக்கியமான அம்சங்கள்:
கே.கே.ஆர்., ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது
இந்த முதலீட்டின் மூலம், கே.கே.ஆர்., நிறுவனத்துக்கு, ரிலையன்ஸ் ஜியோவின், 2.32 சதவீத பங்குகள் கிடைக்கும்
கே.கே.ஆர்., நிறுவனம், ஆசியாவில் மேற்கொள்ளும் மிகப் பெரிய முதலீடு, இதுவேயாகும்
ஜியோ பிளாட்பார்மில், பெரிய அளவில் முதலீடு செய்யும், ஐந்தாவது நிறுவனமாகும், கே.கே.ஆர்.,
இதற்கு முன், பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்டிக் ஆகிய நிறுவனங்கள், ஜியோவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன
இந்த ஐந்து நிறுவனங்கள் மூலமாக, ஜியோ ஈட்டும் மொத்த தொகை, 78 ஆயிரத்து, 562 கோடி ரூபாய் ஆகும்
கொரோனா பாதிப்புகளையும் மீறி, வெற்றிகரமாக அதிகளவில் நிதி திரட்டும் நிறுவனமாக, ரிலையன்ஸ் மாறி உள்ளது
கே.கே.ஆர்., நிறுவனம், 1976ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்நிறுவனம், பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது
இந்நிறுவனம் துவங்கியதிலிருந்து இதுவரை, கிட்டத்தட்ட, 2.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது
இந்த ஒப்பந்தத்தை பொறுத்தவரை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக, ’மார்கன் ஸ்டான்லி’யும், சட்ட ஆலோசகராக, ’ஏ.இசட்.பி., அண்டு பார்ட்னர்ஸ்’ மற்றும் ’டேவிஸ் போல்க் அண்டு வார்டுவெல்’ ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன
கே.கே.ஆர்., நிறுவனத்துக்கு நிதி ஆலோசகராக, ’டெலாய்ட் டச் தோமட்சு இந்தியா எல்.எல்.பி.,’ நிறுவனமும், சட்ட ஆலோசகராக, ‘ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் அண்டு கோ’ மற்றும் ‘சிம்ப்சன் தாச்சர் அண்டு பார்ட்லெட் எல்.எல்.பி.,’ ஆகிய நிறுவனங்களும் செயல்படுகின்றன.
கே.கே.ஆர்., முதலீடு, பரிவர்த்தனைஒழுங்குமுறை மற்றும் பிற வழக்கமான ஒப்புதல்
களுக்குப் பிறகே முழுமையடையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|