59 ஆயிரம் வாகனங்கள்  டி.வி.எஸ்., விற்பனை 59 ஆயிரம் வாகனங்கள் டி.வி.எஸ்., விற்பனை ... ‘மாருதி’ சி.என்.ஜி., கார்கள்ஒரு லட்சம் விற்பனை ‘மாருதி’ சி.என்.ஜி., கார்கள்ஒரு லட்சம் விற்பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
’இந்திய வாகன சந்தை வேகமாக மீண்டெழும்’: எஸ்.எஸ்.கிம் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2020
19:14

’இந்திய வாகன சந்தை நெகிழ்வுத்தன்மை கொண்டதால், மற்ற நாடுகளை விட வேகமாக மீண்டெழும்’ என ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.கிம் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் ஹூண்டாய் நிறுவனம் மீண்டும் உற்பத்தியை துவங்கியுள்ளது. இந்நிலையில், எகனாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில், கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு கிம் அளித்த பதிலும் பின்வருமாறு :


1. கேள்வி : உங்களது விற்பனை குறித்து பார்வை என்ன ?

பதில் : இந்திய வாகன சந்தை சவாலான சூழ்நிலைகளில் மிகவும் நெகிழ்ச்சியுடன் உள்ளது . இது பிற நாடுகளை விட வேகமாக மீட்சியடையும். பண்டிகை காலங்களில் சந்தை சில மறுமலர்ச்சியைக் காணும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம். கூடுதலாக, வாடிக்கையாளர் உணர்வும் மாறுவதைக் காண்கிறோம். பகிர்ந்து கொள்வதை விட சொந்த வாகனங்களுக்கு புதிய தேவை இருப்பதை காண்கிறோம். சிறிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தேவை அதிகரிக்குமென நம்புகிறோம்.


2. கொரோனா நெருக்கடியை சமாளிக்க நீங்கள் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுத்து வருகிறீர்கள் ?

ப : இந்த சவாலான சூழலில் வாடிக்கையாளர்களின் கவலையை போக்குவதே எங்களுடைய முதல் வேலை. நாங்கள் சமீபத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பல வகையான நிதி திட்டங்களை அறிவித்துள்ளோம். ஹூண்டாய் முன்னதாகவே டிஜிட்டல் முறையில் விற்பனை மற்றும் சர்வீஸ் நடவடிக்கைகளை துவங்கி விட்டது. குறுகிய காலத்தில் இந்த முயற்சி கவனத்தை ஈர்க்கும். டிஜிட்டல் துறையில் புதுமைகளை தொடர்வதுடன், எங்களது ஷோரூம் மற்றும் வேலை பார்க்கும் இடங்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்துள்ளோம்.


3. கொரோனா காரணமாக புதிய வாகன மேம்பாடு மற்றும் அறிமுகம் செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா ?

ப : ஹூண்டாயிடம் இந்தியாவுக்கான தயாரிப்புகள் குறித்து நீண்டகால வரைபடம் உள்ளது. அந்த திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை. சுகாதார மற்றும் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் மட்டும் கவனம் உள்ளது. கூடுதலாக, எங்கள் தயாரிப்புகளை தொழில்நுட்ப வலிமையின் மூலம் புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன் , வெவ்வேறு தயாரிப்புகளை மேம்படுத்துகிறோம்.


4. இந்த நெருக்கடி காரணமாக திட்டமிட்ட முதலீடுகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா?

ப : இந்தியாவில் எங்களின் திட்டங்களில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். வளர்ச்சிக்கான சுழல் குறித்து கண்காணித்து வருகிறோம்.


5.அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

ப : இது தற்சார்புள்ள இந்தியா அல்லது ஆத்மநிர்பார் பாரத் பற்றிய நாட்டின் பார்வையை காட்டுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும். ஐந்து முக்கிய தூண்கள் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல உதவுகிறது. அவை, பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பு, துடிப்பான மக்கள் தொகை மற்றும் தேவை. தற்சார்புள்ள இந்தியாவைப் பொறுத்தவரை, உள்நாட்டு உற்பத்தித் துறை பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான நெம்புகோலாக செயல்பட முடியும். இதற்கு உள்நாட்டிற்குள் வினியோக சங்கிலி தொடர் மற்றும் சிறப்பு தொழிற்மண்டலங்கள் தேவை. சிறு,குறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் உந்துதல் மற்றும் நிதியமைச்சரின் பொருளாதார ஊக்குவிப்ல்பு திட்டங்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கான சூழலை உருவாக்க ஊக்கமளிக்கும்.

6. வாகனத் தொழிலுக்கு உதவ என்ன மாதிரியான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?

ப : முதல் மற்றும் முக்கியமானது எங்கள் டீலர்களுக்கு கடன் வசதி கிடைக்க செய்ய வேண்டும். எம்.எஸ்.எம்.இ துறையில் ஒரு அங்கமாக சில நிவாரண நடவடிக்கைகளையும் அரசு அறிவித்துள்ளது. இரண்டாவதாக, தேவையை அதிகரிக்க அளவிடப்பட்ட ஸ்கிராப்பேஜ் திட்டத்தை அரசு பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். மூன்றாவது பெரிய அம்சம் வரிவிதிப்பு ஆகும். அரசு தேவை அதிகரிக்கலாம். விலைகளை குறைக்க ஜி.எஸ்.டியில் குறைப்பு அல்லது தனிநபர் வரிவிதிப்பை குறைப்பதால் நுகர்வோரின் கைகளில் அதிக பணம் புலங்கும். அதே சமயம், மறு உற்பத்தியை துவங்க ஊழியர்கள் வருவதற்கும், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் தடையின்றி பொருட்களை நகர்த்துவதற்கும் உள்ளூர் அதிகாரிகளின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)