பதிவு செய்த நாள்
02 ஜூலை2020
22:40
திருப்பூர்:தபால்துறை சேமிப்பு வட்டி விகிதங்கள், இந்த நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், அதாவது ஜூலை – செப்., கால கட்டத்துக்கானது மாற்றப்படவில்லை.
வட்டி விகிதங்கள் வருமாறு:
தபால்துறை சேமிப்புக் கணக்குக்கு ஆண்டுக்கு, 4 சதவீதம்; ஐந்து ஆண்டு தேசிய சேமிப்பு
சான்றுக்கு, 6.8 சதவீதம்; பொது சேம நல நிதிக்கு, ஆண்டுக்கு, 7.1 சதவீதம்; கிஷான் விகாஸ் பத்திரத்துக்கு, 6.9 சதவீதம்; செல்வமகள் திட்டத்துக்கு, 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு கால வைப்புத் தொகைக்கு, 5.5 சதவீதம்; ஐந்தாண்டு கால வைப்புத் தொகைக்கு, 6.7 சதவீதம்; ஐந்தாண்டு தொடர் சேமிப்புக் கணக்குக்கு, 5.8 சதவீதம்; ஐந்து ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கு, 7.4 சதவீதம் (இவை அனைத்தும் காலாண்டுக்கும்) ஐந்து ஆண்டு வருவாய் கணக்குக்கு, 6.6 சதவீதம் (மாதந்தோறும்) வட்டி வழங்கப்படுகிறது.
வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், தபால்துறை சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|