தங்கம் விலையில் வீழ்ச்சி - மூன்று நாளில் சவரன் ரூ.2,248 சரிந்ததுதங்கம் விலையில் வீழ்ச்சி - மூன்று நாளில் சவரன் ரூ.2,248 சரிந்தது ...  ரிலையன்ஸில் முதலீடு: முயற்சியை விடாத அராம்கோ ரிலையன்ஸில் முதலீடு: முயற்சியை விடாத அராம்கோ ...
ஜியோமி எம்ஐயுஐ 12 : என்ன சிறப்பு அம்சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
19:35

ஜியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த தலைமுறையான எம்ஐயுஐ 12 அப்டேட்டினை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஒரு சந்தையை பிடித்துள்ளது ஜியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள். எம்.ஐ., ரெட்மி ரக போன்களை இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறத. இதன் சிறப்பு அம்சமே குறைந்த விலையில் உயர் ரக தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய மொபைல்போன்களை வெளியிடுவதே. இந்நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு வெர்சனில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி கடைசியாக எம்ஐயுஐ 11 வெர்சனை வெளியிட்டது. இப்போது எம்ஐயுஐ 12 வெர்சனை இன்று(ஆக., 12) வெளியிட்டது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அனிமேஷன்
முக்கியமாக எம்ஐ லைட்ஸ் கோன் அனிமேஷன் என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 3டி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

புதிய வெதர் ஆப்
வானிலை நிலவரத்தை அறிந்து கொள்ள புதிய ஆப் இந்த தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அனிமேஷன்கள் உடன் மற்ற போன்களின் வானிலை நிலவரத்தை விட இதில் வித்தியாசமாக உணரலாம்.

சூப்பர் வால்பேப்பர்
இந்த ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் சூப்பர் வால்பேப்பர் என்ற ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் உள்ளிட்ட வான்வெளி சம்பந்தப்பட்ட போட்டோக்களை அதன் ஒரிஜினல் தரத்தில் பெறலாம். இதிலும் நிறைய சிறப்பு அம்சங்கள் உள்ளன. பகல், இரவு உள்ளிட்ட நேரத்திற்கு தகுந்தபடி போட்டோக்களை மாற்றிக் கொள்ள முடியும்.

டார்க் மோடு
ஜியோமி சிஸ்டம் ஆப்பில் டார்க் மோடு என்ற ஆப்ஷனை எம்ஐயுஐ 11ல் கொண்டு வந்தது. இப்போது மற்ற நிறுவனங்களின் ஆப்களுக்கும் இந்த டார்க் மோடு வசதியை பெறலாம்.

ஆப் டிராயர்
இந்த எம்ஐயுஐ 12ல் போனில் உள்ள எல்லா ஆப்களையும் ஒரே பகுதியில் கொண்டு வரும் ஆப் டிராயர் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர மேஜிக் குளோன், யுனிவர்செல் காஸ்டிங் டூல், புளோட்டிங் விண்டோ, அல்ட்ரா பேட்டரி சேவர் ஆகியவற்றிலும் சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எம்ஐயுஐ 12 வெர்சனை, எம்ஐ 10, ரெட்மி நோட் 9, 8, 7 மற்றும் ரெட்மி நோட் 9புரோ, 8புரோ, 7 புரோ ஆகிய போன்களில் மேம்படுத்தி கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு இந்த மாதம் ஆக.,20ம் தேதி அல்லது அதற்கு பின் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)