பதிவு செய்த நாள்
01 அக்2020
21:05
புதுடில்லி:அமெரிக்க தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில், 1,875 கோடி ரூபாயை, கூடுதலாக முதலீடு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இதையடுத்து, இந்நிறுவனத்தின் முதலீடு, 9,375 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த புதன்கிழமையன்று, அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, ஜெனரல் அட்லான்டிக், ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தின், 0.84சதவீத பங்குகளை பெற்று, 3,675 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது சில்வர் லேக் நிறுவனம் கூடுதல் முதலீட்டை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.இதற்கிடையே, அபுதாபியை சேர்ந்த,‘முபதாலா’ முதலீட்டு நிறுவனம், ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தில், 6,247.5 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டின் மூலம், முபதாலா வசம் ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின், 1.4 சதவீத பங்குகள் வரும். ‘முபதாலா நிறுவனம், இதற்கு முன், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 9,093.60 கோடி ரூபாயை முதலீடு செய்து, 1.85 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|