பதிவு செய்த நாள்
21 செப்2021
20:43
மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா ட்ரக் & பஸ் டிவிஷன் பிரிவு (எம்டிபி), தனது புத்தம் புதிய மஹிந்திரா ப்யூரியோ 7 வாகனத்தின் வர்த்தக அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது. ப்யூரியோவின் அதன் சமீபத்திய, நவீன வகை இலகு வணிக வாகனங்கள் (எல்சிவி) இதுவரையில்லாத இரட்டை உத்தரவாதத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு "அதிக மைலேஜ் அல்லது டிரக் பேக்" மற்றும் "உத்தரவாத மறுவிற்பனை மதிப்பு". என்னும் இரண்டு அம்சங்களுக்கான உத்திரவாதங்களை மஹிந்திரா வழங்குகிறது.
மஹிந்திரா ட்ரக் & பஸ், நடுத்தர வர்த்தக வாகன ப்ராண்ட்டாக ப்யூரியோ-வை 2019-ல் அறிமுகப்படுத்தியது. இவ்வாகனத்தின் புதிய லைட் கமர்ஷியல் வாகன வரம்பில் புத்தம் புதிய தயாரிப்பாக மஹிந்திரா ப்யூரியோ 7 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. . இந்த வரம்பிலான ப்யூரியோ 7, 4-டயர் சரக்கு வாகனம், 6 -டைர் சரக்கு ஹெச்டி மற்றும் 6-டயர் டிப்பர் ஆகிய பிரிவிலான மூன்று தயாரிப்பு தளங்களில் கிடைக்கிறது. லைட் கமர்ஷியல் வாகனப் பிரிவுகளில் வணிகத் தேவைகளின் ஒவ்வொரு பயன்பாடுகளை இவ்வாகனம் பூர்த்தி செய்யும். அதிக லாபம், இப்பிரிவு வாகனங்களிலேயே மிகச் சிறப்பான மைலேஜ், அதிக பே-லோட் மற்றும் செளகரியமான கேபின், பாதுகாப்பு மற்றும் செளகரியம் ஆகியவற்றை ப்யூரியோ ப்ராண்ட் வழங்குகிறது. மேலும் இது மிகவும் மேம்பட்ட மஹிந்திரா ஐமேக்ஸ். டெலிமாடிக்ஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.
மஹிந்திரா ப்யூரியோ 7 லைட் கமர்ஷியல் வாகன வரம்பானது, ப்யூரியோ ஐஎல்சிவி தயாரிப்பு வரம்பு வாகனங்களின் மேம்பட்ட ஒரு தயாரிப்பாகும். இது கடந்த 6 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மஹிந்திரா பொறியாளர்கள் மற்றும் 180 சப்ளையர்களின் முழுக்கவனம், முயற்சிகளுடன் 650 கோடி முதலீட்டில் உருவான ஒன்றாக அறிமுகமாகி உள்ளது. வெற்றிகரமான மற்றும் பிரபலமான மைலேஜ் உத்திரவாதம் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட எம்டிபியின் கனரக வர்த்தக வாகனமான ப்ளேஸோ எக்ஸ் ஐ தொடர்ந்து தற்போது ப்யூரியே வரம்பிலான வாகனங்கள் அறிமுகமாகி உள்ளது. மைலேஜ் உத்திரவாதமானது, ப்ளேஸோ எக்ஸ் வாகனத்தை அதிக எரிப்பொருள் சிக்கனமுள்ள வாகனமாக ஹெச்சிவி பிரிவில் முன்னிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது, என்று மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் ஆட்டோமோட்டிவ் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் நக்ரா தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|