சாதனை படிகளில் சென்செக்ஸ்   61 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சாதனை படிகளில் சென்செக்ஸ் 61 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது ...  ‘பி.பி., பின்டெக்’ பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி ‘பி.பி., பின்டெக்’ பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘எம்.எம்.ஸ்டைல்ஸ்’ பங்குகள் வாங்குகிறது ‘ரிலையன்ஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2021
19:25

புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் பிராண்டு’ நிறுவனம், பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ராவின், ‘எம்.எம்., ஸ்டைல்ஸ்’ நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.இந்த 40 சதவீத பங்குகளை, என்ன விலையில் ரிலையன்ஸ் பிராண்டு வாங்குகிறது என்பது அறிவிக்கப்படவில்லை.

ரிலையன்ஸ் பிராண்டு நிறுவனம் இதுவரை அதனுடைய வடிவமைப்பாளர்களையே பயன்படுத்தி வந்த நிலையில், முதல்தடவையாக வெளியே முதலீட்டை மேற்கொண்டுள்ளது.இதன் வாயிலாக, 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் எம்.எம்., ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி, இனி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2005ம் ஆண்டில் துவங்கப்பட்ட எம்.எம்., ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு மும்பை, புதுடில்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஸ்டோர்கள் உள்ளன. இந்நிறுவனத்தில், மல்ஹோத்ராவுடன் சேர்ந்து மொத்தம் 700 கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் 40 சதவீத பங்குகளை வாங்கிய போதிலும், மனிஷ் மல்ஹோத்ராவே எம்.எம்., ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)