பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ...  ‘மான்யவார்’ பங்கு வெளியீடு 4ம் தேதி துவங்குகிறது ‘மான்யவார்’ பங்கு வெளியீடு 4ம் தேதி துவங்குகிறது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முதலீட்டாளர்களை அதிர வைத்த பங்குச் சந்தை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
09:47


மும்பை : பங்குச் சந்தை வர்த்தகத்தில், கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் மோசமான நாளாக, நேற்று அமைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' 1,546 புள்ளிகள் சரிவைக் கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் 'நிப்டி' 17 ஆயிரத்து, 200 புள்ளிகளுக்கு கீழே இறங்கியது.அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பெடரல் வங்கியின் பணக்கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, உலக சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. அது இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது.

மேலும், சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்களுடைய முதலீட்டை தொடர்ந்து வெளியே எடுத்தது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை குறைத்தது. இதுவும் இந்த சரிவுக்கு காரணமாக அமைந்தது.

சென்செக்ஸ் பிரிவில் இருக்கும் 30 நிறுவன பங்குகளும் நேற்று விலை சரிவை சந்தித்தன. பஜாஜ் பைனான்ஸ் அதிக இழப்பை சந்தித்தது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நேற்று மட்டும் 68 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தை கண்டுள்ளது.
உலகளவில் ஐரோப்பிய, ஆசிய சந்தைகளும் நேற்று சரிவை கண்டுள்ளன. டோக்கியோ சந்தை மட்டும் சற்று உயர்வை கண்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)