பதிவு செய்த நாள்
29 ஜன2022
18:54
புதுடில்லி:‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனத்தின் தயாரிப்புகளான, ‘டொயோட்டா கிளான்ஸா’ மற்றும் ‘அர்பன் க்ரூஸர்’ ஆகியவற்றின் மொத்த விற்பனை, ஒரு லட்சத்தை தாண்டியுஉள்ளது.
டொயோட்டாவின், ‘பிரீமியம் ஹேட்ச்பேக்’ காரான கிளான்ஸா மற்றும் காம்பாக்ட் எஸ்.யு.வி., காரான அர்பன் க்ரூஸர் ஆகிய இரு கார்களும், மாருதி சுசூகி ஆலையில் தயாரித்து பெறப்படுகின்றன. இதற்காக, இவ்விரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்நிலையில், இவ்விரு கார்களும் சேர்த்து, அவற்றின் மொத்த விற்பனை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாக, டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. கிளான்ஸா கார், கடந்த 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 65 ஆயிரம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. அர்பன் க்ரூஸர் கார், கடந்த 2020 செப்டம்பரில் அறிமுகம் ஆனது. இதுவரை 35 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்நிறுவனம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகர சந்தைகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|