பதிவு செய்த நாள்
01 ஜூன்2022
20:38
பீஜிங்:இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளி அமெரிக்கா அல்ல; நாங்கள் தான் என, சீனா, தரவுகளை காட்டி அறிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தில், சீனாவை விஞ்சி, முதலிடத்தை அமெரிக்கா பிடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.இந்நிலையில், இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தில், அமெரிக்காவை விட சீனா தான் முன்னிலை வகிப்பதாக, அந்நாடு தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியனிடம், ஊடகவியலாளர், இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தில், சீனாவை அமெரிக்கா விஞ்சியிருப்பது குறித்து கேள்விகள் எழுப்பினர்.இது குறித்து ஜாவோ கூறியதாவது:
சீனாவின் புள்ளிவிபரங்களின்படி, 2021ம் ஆண்டில், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 9.80 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. முதன் முறையாக இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகம் 2021ல் 100 பில்லியன் டாலர் அதாவது, கிட்டத்தட்ட 7.80 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.இருதரப்பு வர்த்தகம் குறித்த புள்ளி விபரங்கள் வேறுபடுவதற்கு காரணம், இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு புள்ளியியல் அளவீடுகளை கொண்டு கணக்கிட்டிருப்பது தான்.
மேலும், இந்தியா நிதியாண்டை ஏப்ரல் முதல் மார்ச் வரை கணக்கிடுகிறது. சீனா, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை என கணக்கில் கொள்கிறது. இதுவும் வித்தியாசத்திற்கு முக்கிய காரணம்.இதற்காக, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நடைபெறும் வழக்கமான வர்த்தகத்துக்கு சீனா எதிர்ப்பை காட்டுவதாக கருதிவிட வேண்டியதில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|