நோக்கியா ஆஷா 306 ஓர் பார்வைநோக்கியா ஆஷா 306 ஓர் பார்வை ... இந்தியாவில் விற்பனைக்கு வந்தது நோக்கியா 301 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது நோக்கியா 301 ...
சாம்சங் எஸ் 6012 காலக்ஸி மியூசிக் ஓர் பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
15:01

சென்ற அக்டோபரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் போன் கடைகளில், தேடி வாங்கப்படும் மொபைல் போனாக, சாம்சங் காலக்ஸி மியூசிக் எஸ் 6012 உள்ளது. இரண்டு சிம்களை இயக்கும் இந்த மொபைல் நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 110.1x 59 x 12.3 மிமீ ஆக உள்ளது. எடை 107 கிராம். இதன் திரை 3 அங்குல டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையில் மல்ட்டி டச் வசதியும் தரப்பட்டுள்ளது. பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் கருப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது.

லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஸ்டோரேஜ் 4 ஜிபி, ராம் 512 எம்பி என இதன் நினைவகங்கள் அமைந்துள்ளன. ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை-பி, தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. A2DP இணைந்த புளுடூத் இயங்குகிறது. 3.15 எம் பி திறன் கொண்ட கேமரா, வீடியோ திறனுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங், டச் போகஸ் வசதிகள் கிடைக்கின்றன. ஸ்டீரியோ எப்.எம் ரேடியோ, உள்ளமைந்த ஆண்டெனா, அக்ஸிலரோமீட்டர், ஆண்ட்ராய்ட் 4.0.4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகக் கிடைக்கிறது.

எஸ்.எம். எஸ்.,எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகியவை உள்ளன. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் இயங்குகின்றன. ஏ ஜிபிஎஸ் சப்போர்ட் தரப்பட்டுள்ளது. ஆர்கனைசர், போட்டோ வியூவர், எடிட்டர், வாய்ஸ் மெமோ, கூகுள் சர்ச், ஜிமெயில், மேப்ஸ், யு ட்யூப் காலண்டர், ஜி டாக் ஆகியவற்றிற்கான நேரடி இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டது. இதன் மூலம் தொடர்ந்து 15 மணி நேரம் பேச முடியும். மின் சக்தி 570 மணி நேரம் தங்குகிறது. இதன் கதிர் வீச்சு 0.75 W.kg என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 6,999.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் ஐ.டி செய்திகள்

business news
பெங்களூரு:இந்­திய தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில், இரண்­டா­வது பெரிய நிறு­வ­ன­மாக இன்­போ­சிஸ் விளங்­கு­கிறது. ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த நான்கு ஆண்­டு­களில், பல்­வேறு துறை­கள், மின்­னணு தொழில்­நுட்­பத்­திற்கு மாறு­வ­தன் மூலம், ... மேலும்
business news
வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­வ­தற்­கான புதிய படி­வங்­களை, மத்­திய நேர்முக வரிகள் வாரியம் வெளி­யிட்­டுள்­ளது. ... மேலும்
business news
புதுடில்லி:‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு, 2017- – 18ம் நிதி­யாண்­டின், அக்., – டிச., வரை­யி­லான ... மேலும்
business news
பெங்களூரு:‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னத்­தின், புதிய தலைமை செயல் அதி­கா­ரி­யாக பொறுப்­பேற்­றுள்ள, சலீல் பரேக்­கிற்கு, ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)