பதிவு செய்த நாள்
30 ஜூன்2013
00:47
சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 464 ரூபாய் உயர்ந்து, 19,496 ரூபாய்க்கு விற்பனையானது.சர்வதேச நிலவரங்களால், நேற்று முன்தினம் கடும் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை, நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,379 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,032 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 25,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 58 ரூபாய் அதிகரித்து, 2,437 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 464 ரூபாய் உயர்ந்து, 19,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 620 ரூபாய் அதிகரித்து, 26,060 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 43.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஒட்டு மொத்த அளவில்,கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 96 ரூபாயும், சவரனுக்கு, 768 ரூபாயும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|